Header Ads



வௌ்ள நிவாரணத்தை வழங்குவதற்காக, பாலியல் இலஞ்சம் கேட்ட அதிகாரி கைது

அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள வௌ்ள நிவாரணத்தை வழங்குவதற்காக 24 வயது இளம் குடும்பப் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியதோடு, அவரை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக கூறப்படும் அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

வனாத்தவில்லு பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட 41 வயதான கிராம சேவகர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். 

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட அதிக மழை காரணமாக காலஓய ஆறு பெருக்கெடுத்தமையால் ஏற்பட்ட வௌ்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க ஒதுக்கப்பட்ட நிதியை வழங்கவே அவர் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர் வௌ்ள பாதிப்பு குறித்து ஆராய வீட்டுக்கு வந்திருந்த வேளையே தன்னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்டதாக குறித்த பெண் வழங்கிய முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவரை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

1 comment:

  1. நல்லாட்சி அரசாங்கம் முதலில் சுத்தம் செய்ய வேண்டியது இந்த GSகளைத்தான் எந்த ஒரு வேலையும் இலஞ்சம் இல்லாமல் செய்வாதில்லை.ஒரு அடையாள அட்டையை எடுப்பதாக இருந்தாலும்.ஒரு சான்றிதல் சட்டப்படி தருவதாக இருந்தால் குறைந்த இலஞ்சம் சட்டத்துக்கு மாறாக செய்வதற்கு அது பெருந்தொகை ஆக மொத்தத்தில் எந்த வேலையும் இலஞ்சம் இல்லாமல் அவர்களிடம் நெருங்க முடியாது,வாரக்கணக்கு மாதக்கணக்கில் ஏமாற்றுவது.வீட்டுக்குள் சத்தம் இல்லாமல் இருந்துகொண்டு மனைவி பிள்ளைகள் ஆள் இல்லை என்று சொல்வது.Gsசிலர் சொல்ல முடியாத அளவுக்கு கேவலமான துரோகம் செய்கின்றார்கள்.பெண்கள்,விதவைகள்,வயது போன பெண்கள் என்றும் பாராமல் ஒரு மனச் சாட்சி இல்லாமல் ஏமாற்றும் படு மோசமான வேலையை செய்கிறார்கள் ,இவர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிமட்ட மக்கள் பாதிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்,அப்பதான் இந்த அரசாங்கம் நல்லாட்ச்சி அந்தஸ்தை முழுமையாக அடையும்,

    ReplyDelete

Powered by Blogger.