தேங்காய் திருட வந்தவர், துப்பாக்கிச் சூட்டில் பலி
வெலிவேரிய, இம்புல்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அனுமதியின்றி தோட்டம் ஒன்றிற்குள் நுழைந்து தேங்காய் திருட முற்பட்ட ஒருவர் மீது தோட்ட காவலாளியால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், 63 வயதுடைய தோட்ட காவலாளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், திருட வந்த நபர் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாகவும் கைது செய்யப்பட்டுள்ள தோட்ட காவலாளி கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment