Header Ads



நல்லிணக்கத்திற்கு எதிராக விக்னேஸ்வரன் - சுமந்திரன் சாடல்


வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எழுக தமிழ் பேரெழுச்சியில் தெரிவித்திருக்கும் கருத்து நாட்டின் நல்லிணக்கத்திற்கு எதிரானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி நடைபெற்றிருந்தது.

குறித்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவையும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான கண்டனங்களையும் வெளியிட்டிருந்தனர்.

பேரணியின் இறுதியில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் சுமந்திரன்,

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, நாம் அதில் கலந்துகொள்ள வில்லை.

இன்றைய தினம் வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்து நாட்டின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எதிரானது.

நாட்டில் புதிய அரசியல் யாப்பு உருவாக்க நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் தெற்கு மக்களுக்கு தவறான ஒரு கருத்தை கொடுப்பதாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

9 comments:

  1. அரசியல் சாணக்கியம்-சுயநலம் ஆகியவற்றிற்கான வேறுபாட்டை தமிழர் புரிந்து கொள்ளவேண்டிய அவசியமான காலகட்டமிது!
    விக்கி கொள்ளைப்புறக்கதவு வழியே தமிழரை மீண்டும் இருண்ட காலத்திற்கே கொண்டு செல்ல நிணக்கிறார் போல! ்

    ReplyDelete
  2. Evar wasudeewa nanayakkaravin machchan .vasudeewa mahal wigneswaran mahan tirumanam seydu irukkaru.wigneswaran pechchukku wasudewa enna solla pohirar.

    ReplyDelete
  3. தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய சிறப்பான எத்தனையோ வாய்ப்புகளை புலிகள் வீணடித்தார்கள். இறுதியில் நந்திக்கடலில் வீழும் வரை பிரபாகரன் திருந்தவில்லை. அவரது பாதையில் தற்போது விக்கி பயணிக்கிறார். வெறும் வீர வசனம் பேசுவதால் எதையும் சாதிக்க முடியாது. சமாதான சகவாழ்வு பற்றி பேரணி போகலாமே?

    ReplyDelete
  4. Well done Sumandran. You are the only real gentleman among TNA members.

    ReplyDelete
  5. He is doing contract of mahinda thru vasudeva(His cousin).

    ReplyDelete
  6. He is doing contract of mahinda thru His cousin vasudeva.

    ReplyDelete
  7. இருவருமே வடகிழக்கு இணையபோராடுகிறீர்கள் இணைந்து பபோராடுங்கள்.

    ReplyDelete
  8. Whatever it is, Vicky vs Sumanthiran is internal TNA issues. Both are good leaders and both are correct.

    But party leader is Sambanthan.

    ReplyDelete
  9. Vicky is a racist.

    He should be arrested and should be behind bars.

    ReplyDelete

Powered by Blogger.