மணப்பெண் வீட்டாருக்கு குறைந்தளவு மதுபானம், வெடித்தது கைகலப்பு - கம்பளையில் சம்பவம்
திருமண வீடொன்றில் மணப்பெண் வீட்டு விருந்தினருக்கு குறைவாக மதுபானம் வழங்கப்பட்டதால் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கம்பளை நகரிற்கு அருகாமையில் அமைந்துள்ள திருமண விருந்துபசார மண்டபத்தில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருமண விருந்துபசார வைபவத்தின் போது மணப்பெண் வீட்டாருக்கு குறைந்தளவு மதுபானம் வழங்கப்பட்டதாகக் கூறி மணமகன், மணமகள் வீட்டாரிடையே மோதல் வெடித்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கம்பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருந்துபசாரத்தின் போது ஒவ்வொரு மேசைக்கும் ஒரு போத்தல் மதுபானம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மதுபானத்தை அருந்திய ஒரு குழுவினர் மேலதிமாக மதுபானம் கேட்ட போது வழங்கப்படாமையினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதுடன், சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment