Header Ads



விக்னேஸ்வரன் கேட்பது போல, அரசாங்கம் எதனையும் வழங்காது - ரஞ்சன்

 விக்னேஸ்வரன் கேட்பது போல் இந்த அரசாங்கம் எதனையும் வழங்காது என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மக்களின் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள முன்வந்துள்ள நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தன்னை எடுப்பித்து காண்பித்து கொள்வதற்காக மக்களை கூட்டி பல்வேறு நிகழ்வுகளை நடந்துகிறார்.

ஊடகவியலாளர்கள் செய்தியளிக்கும் போது இனவாதத்தை தூண்டாத வகையில், புத்திசாலித்தனமாக செய்தியளிக்க வேண்டும்.

வடக்கு மாகாண முதலமைச்சர் அண்மையில் மேற்கொண்ட செயலை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று /26
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

வடக்கில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதை விக்னேஸ்வரன் எதிர்ப்பாரேயானால், தெற்கில் கோவில்கள் நிர்மாணிக்கப்படுவது போன்றவை குறித்து அவர் என்ன சொல்லப் போகிறார்.

தவறு செய்யவில்லை என்றால், விசாரணைகள் குறித்து படையினர் அச்சப்பட வேண்டியதில்லை. இராணுவத்தினரை  மாத்திரமல்ல கொலையாளிகளையும் அடையாளம் காணவேண்டும்.

மொஹமட் சியாம் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரியான வாஸ் குணவர்தனவை படை வீரராக கருத முடியாது என்றால், தாஜூடீன் சம்பவத்தில் உடற்பகுதிகளை திருட்டுத்தனமாக எடுத்துச் சென்ற மருத்துவரை சிறந்த மருத்துவராக கருத முடியாது.

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்படுவதற்கு முதல் வாரம் அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து உண்டு, குடித்து மகிழ்ச்சியாக இருவரும் உரையாடியுள்ளனர்.லசந்த கொலை செய்யப்படும் முன்னர் அவரது தொலைபேசியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி அழைப்பொன்றை எடுத்துள்ளார். எனினும் இந்த கொலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி தற்போது கூறுகிறார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலை படை உறுப்பினர் தாக்குதல் நடத்த செல்லும் முன்னர், புலிகளின் தலைவர் அந்த உறுப்பினருக்கு உணவு வழங்கி அவரது ஆசைகளை நிறைவேற்றியது போல, முன்னாள் ஜனாதிபதி செயற்பட்டுள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.