Header Ads



நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சினைகள் - மஹிந்தவின் காரியாலத்தில் இன்று கலந்துரையாடல்

நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் பிரச்சினைகள் சம்பந்தமாக இன்று (29.09.2016) பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காரியாலயத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடல்  முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள், புத்திஜீவிகள், மற்றும்  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கிடையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், நல்லாட்சியில் இன்று முஸ்லிம்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்டது.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கை இணைத்தால் அங்குள்ள சிங்கள முஸ்லிம் மக்கள்  எதிர்காலத்தில் எதிர்நோக்கவேண்டி வரும்  பிரச்சினைகள் தொடர்பாகவும்  கலந்துரையாடப்பட்டது. இந்த இணைப்பை பசில்  ராஜபக்சவும் ஸ்ரீலங்கா சுதந்திர முஸ்லிம் முற்போக்கு முன்னணியும் உலமா கட்சியும் வன்மையாக எதிர்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், வர்த்தக நடவடிக்கைகள் போன்றவற்றில் , நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஏற்பட்டுள்ள பாரதூரமான சவால்கள்  உட்பட பல்வேறு  விடயங்கள் தொடர்பாகவும்  கலந்துரையாடப்பட்டது

இந்நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் A.H.M.அஸ்வர், முன்னாள் மேல் மாகாண ஆளுநரின் இரு புதல்வர்களான நகீப் மௌலானா, நஜீப் மௌலானா, பேருவளை முன்னாள் நகரசபை தலைவர் மிள்பர் கபூர், பேருவளை பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் இஸ்மாயீல், வெலிகம முன்னாள் நகரசபைத் தலைவர் முஹம்மத், பாணந்துறை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இபாஸ் நபுஹான், முன்னாள் மாகாண சபை  உறுப்பினர் அப்துல் சத்தார், ரக்வானை, கொடகவளை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் A.R.M.தாவூஸ், தெஹிவளை - கல்கிஸ்சை முன்னாள் நகரசபை உறுப்பினர் சாபித், கல்முனை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஸ்தபாவின் புதல்வர் நவாஸ் முஸ்பா, மன்னார் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நகரசபை வேட்பாளர் B.ஜஸார், மல்வானை பிரபல வியாபாரி இஸ்மாயில் ஹாஜியார், உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் உட்பட  பலரும் கலந்து கொண்டனர். 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனான அடுத்த கட்டச் சந்திப்பு எதிர்வரும் 05.10.2016 ஆம் திகதி பிற்பகல் 3.௦௦மணிக்கு நெலும்மாவத்தையில் உள்ள அவரது அலுவலகத்தில்  இடம்பெறவுள்ளது.

12 comments:

  1. ராஜபக்ச அன் கோ. முற்றாக அரசியலில் இருந்து ஒதுக்கப்பட வேண்டும். இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களுக்கு "திட்ட மிட்ட அடிப்படையில்" முஸ்லிம்களின் இருப்பை இல்லாமல் செய்வதட்கும், இஸ்லாத்தையும், ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தையுமே நெருக்குதலுக்கும், அவமானத்துக்கும், அச்சத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள் என்பதை இந்த முஸ்லீம் சுயநலக் கும்பல்களுக்கு புரியவில்லையா??? இந்த சந்த்திப்பில் கோத்தபாய எங்கே???

    முஸ்லிம்கள் மிகவும் அவதானமாக இவர்கள் விடயத்தில் இருக்க வேண்டும். நல்லாட்சியில் எட்டப்படப்போகும் இனப்பிரச்சினைக்கான தீர்வை குழப்பியடிக்கும் நோக்கில் வடகிழக்கு இணைப்பு பிரச்சினையை கையில் தூக்கி பிடித்து முஸ்லிம்களை அவர்கள் பக்கம் ஈர்த்துக் கொள்ள முட்படுவார்கள். இது முஸ்லிம்களுக்கு தங்கள் கையாலேயே தங்களுக்கு சூனியம் செய்வதட்கு ஒப்பானதாகும்.

    ReplyDelete
  2. MAHINDA PINNAL SUTRUM WEKKAM KETTA IWANGALUKKU ADUTTA ELECTIONLA WEKKIROM AAPPU.IWAGAL SAAPPIDUWATU SORA ALLATU WERU ONDRA? MANITHANAGA PIRANDA MURUGASADIGAL.

    ReplyDelete
  3. my friend today date 27,9,2016 what is 29,9,2016

    ReplyDelete
  4. நல்லாட்சியிழும் முஸ்லிம்க்ளுக்கு எதிராக.. என்று தலைப்பு வரவேண்டும்.

    இதில் கலந்து கொண்டவர்கள் மானம்கெட்டவர்கள்.

    ReplyDelete
  5. Muslims who went to the meeting must keep in their mind,Mahinda & Co. cannot be trusted.

    ReplyDelete
  6. வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக பிரிப்பதற்கு முஸ்லிம்களின் உதவி அவர்களுக்கு தேவை். அதற்குத்தான் இது.

    ReplyDelete
  7. மஹிந்த அன்ட் கம்பெனியுடன் எமது சமூக முனாபிக்குகளும் , சுயநலவாதிகளும். எமது சமூகமே கவனம் .

    ReplyDelete
  8. சகோதரர்களே இந்த ராஜபக்‌ஷ குடும்பம் அவர்களின் ஆட்சிகாலத்தில் முஸ்லிம்களுக்கு பல தீமைகளை நேரடியாக செய்தார்கள் தற்போது அவைகளை மறைமுகமாக செய்துவிட்டு அத்தீமைகளை மற்றவர்கள் செய்ததாக மக்களுக்கு காண்பிக்க முயற்சித்து அவர்களின் ஆட்சியிலும் ஏனையவர்களின் ஆட்சியிலும் முஸ்லிம்களின் உடைமைகளை அளிப்பதில் தொடர்ந்துகொண்டே இருக்கிண்ரார்கள்!!!

    ReplyDelete
  9. பணம் கோடிக்கணக்காக விளையாடுது விளங்கவில்லையா,அவன் பார்ட்டி ஆட்கள் மறு பக்கம் போகப்பார்க்கிறான்கள் அவன்ல ஒருத்தனுக்கு 100 கோடி தாரேன் என்று சொல்லி இருக்கிறான் இப்படி இவனுகளுக்கும் அது விளையாடுமாக்கும் இந்த நேரத்தில் முன்னுக்கு ஆவினா இனி வேட்டை தான் நம்ம சமூகத்திலும் புரளிதான்

    ReplyDelete
  10. குழந்தையை கில்லிவிட்டு தொட்டிலை ஆட்ட முயற்சிக்காதிங்கோ உங்களின் தாலாட்டால் குழந்தை தூங்காது அது தற்போது வீரிட்டு அழுகிறது

    ReplyDelete
  11. Let us support RW and MY3 and get ZERO.

    ReplyDelete

Powered by Blogger.