Header Ads



முஸ்லீம்கள் ஏன், இப்படி இருக்கிறார்கள்..?

-மு.இ.உமர் அலி-

நாடு பயங்கரவாதத்திலிருந்து விடுதலை அடைந்த பிறகு நாட்டுமக்கள் அச்சம் நீங்கியவர்களாக  நாட்டின் நாலாபுறமும் உல்லாசப்பயணங்களை மேற்கொண்டு வருகின்றதை அனைவரும் கண்டிருப்பீர்கள்,என் நீங்களும் கூட உங்கள் குடும்பத்தினர்  நண்பர்கள் சகிதம் பல இடங்களுக்கு சென்றிருப்பீர்கள்,

இவ்வாறு உள்ளூர் வெளியூரில் உள்ள  உல்லாச இடங்களுக்கு செல்லும்போது நாம் செய்கின்ற சில காரியங்கள்  மற்றவர்களால் நாம்  கீழ்த்தரமாக விமர்சிக்கப்படுவதற்கு காரணியாக அமைந்துவிடுகின்றன.

பாதையில் சிறு முட்கள் இருந்தால் அதை அகற்றிவிடுங்கள்  என்று போதனை செய்யும் மாநபியின் வாழ்க்கை வழி முறைகளை பின்பற்றும் நாம் இவ்வாறு சுற்றுப்பிர்யாணங்கள்  செல்லும்போது  மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய  செயல்பாடுகளில்  ஈடுபடுவது மிக்கவும் வேதனைக்குரிய விடையமாகும்.

சிறுவர்கள் அணியும் ‘பெம்பஸ்” பெண்களது பாதுகாப்பு துவாய்கள்,வாந்தி எடுத்த சொப்பின் பேக்குகள்,பழங்கள்  உரித்த தோல்கள்,எஞ்சிய உணவுப்பொருட்கள்,போன்றன உள்ளடங்கலாக பல பொருட்களை  ஆட்கள் நடமாடும் மரங்களின் கீழேயும் , , வீதிகளிலும்,முற்றங்களிலும்,நீரோடைகள் அல்லது குளிக்குமிடங்களின் அருகாமையிலும் வீசி எறிவதனால் அந்தந்த  சூழல்களில் பல பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விளைவுகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு நாம் அனேகமாக செல்லுமிடங்கள்  மாற்றுமத சகோதரர்கள் வாழுமிடங்களாக இருப்பதால் முஸ்லீம் மக்கள் சுற்றாடலை நேசிக்காதவர்கள்,துப்பரவற்றவர்கள்,அழகை அலங்கோலமாக்குபவர்கள்  என்று எண்ணுவதோடு மட்டுமன்றி எம்மிடமே நேரடியாக இதுபற்றிய எதிர்ப்பான கருத்துக்களை கூறுகின்றனர்.”ஓகோள்ளங்கே கட்டி மெத்தன வினாசி கரணவா” “ஒகொள்ளங்கே கட்டிய பிரிசுது நெஹ” “மெத்தன முஸ்லீம் கட்டிய ஆவுத் ஜராவ கரணவா”   என்றெல்லாம் கூறி எம்மீது ஏனையோர் வெறுப்படைவதற்கு இதுவுமொரு பலமான காரணியாக இருக்கின்றது .

எனவே முஸ்லீம்களாகிய நாம் உல்லாசப்பயணங்கள் செல்லுமிடங்களில் கழிவுகளை போடுவதற்கு என ஒதுக்கப்பட்டிருக்கும் தொட்டிகளில் அல்லது இடங்களில் மாத்திரம் கழிவுகளை வீசுவோம்,

ஏனையவர்கள் பயணிக்கும்  ஒற்றையடி பாதைகளிலும், மரங்களின் அடியிலும் தீ மூட்டி  சமைப்பதை தடுப்போம்,எஞ்சிய உணவுகளை கண்டபடி எல்லா இடங்களிலும் கொட்டி விடாமல் பொருத்தமான இடங்களில் கொட்டுவோம்.சமைப்பதற்கு மூட்டிய அடுப்பினை சமைத்து முடிந்தபின் நன்றாக நீரூற்றி அணைத்துவிடுவோம்.

பெண்கள், குழந்தைகளின் பெம்பஸ்களை கண்டபடி கண்ட இடங்களில் வீசி எறிவதை கண்டால் ஆண்கள் அவற்றை தயவுசெய்து எடுத்து பாதுகாப்பான முறையில் அகற்றுவோம்.

அல்லாஹ் நாம் வாழ்வதற்கும்,அனுபவிப்பதற்கும் தந்திருக்கும் சூழலை பேணிப் பாதுகாத்தால்தான்  எம்மைபோன்ற பலரும் அந்த அழகான சூழலை அனுபவிக்க முடியும்.நாம் சுயனலமற்றவர்களாக மட்டுமன்றி பிறர் நலம் காப்பவர்களாகவும் வாழ்ந்து மரணிக்கவேண்டும். 

அல்லாஹ் எம் அனைவரது செயல்களையும் அவதானித்துக்கொண்டே இருக்கின்றான்...!


13 comments:

  1. Well not only when they go on holiday every where they do the same.
    Only worry about their own living environment. They don't care
    About public areas

    ReplyDelete
  2. Good article, Most of these things has to be practiced on day to day basis in our lives, then it will come automatically when we travel.

    ReplyDelete
  3. Idhu poondra seyalhal yemmavarhalidam un-mayil adihamaha kaanap'paduhiradu. Idanpin thirunduvadu mattumillaadu idupoondru nadappavarhalaium insha allah thiruththavendum.

    ReplyDelete
  4. மக்களைச் சென்றடையவேண்டிய செய்தி,
    இது போன்ற இன்னும் பல செய்திகள் மக்களைச் சென்றடையவேண்டும்.
    இணையச் செய்திகள் மூலம் மாத்திரம் நின்றுவிடாமல் பயான்கள், குத்பா உரைகள் போன்ற பள்ளிவாசல்கள் ரீதியாய உபதேசங்கள் வாயிலாகவும் இது போன்ற செய்திகள் மக்களைச் சென்றடைய வேண்டும்.
    இத்தகைய நற்செயல்களின்றி ஒரு மனிதன் முஸ்லிமாகவிருக்க முடியாது என்பது நாம் அறிந்த விடயமே.
    இவர் போன்ற சமூகப்பொறுப்புள்ளவர்களுகளின் பதிவுகளுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. Yes, I have also noticed the same behavior in most of the times. Most of our Muslim brothers and Sisters neglect environment cleanliness. This give very bad impression about Islam.

    ReplyDelete
  6. Thanks Umar. Not only above matters, the loudly speaking people in the public place are the Muslims. Untidy hotels are belongs to our brothers. Quality standards of our eating houses going down day by day.

    ReplyDelete
  7. This is one matter you have highlighted but there are many matters to be conveyed to our Muslim Community.

    We have to teach them how to behave in the hospital and how to behave while using the public transport. I can give you many many examples but I am avoiding it as I feel those matters are very ugly things.

    Our Muslim community is some time valued on these type of behaviors.

    ReplyDelete
  8. உண்மையில் இந்த விடயங்கள் நமது சமூகத்தை சென்றடவைதற்கு சிறந்த பொறிமுறையொன்று உருவாக்கப்படல் வேண்டும் அத்துடன் பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு சிறுவயதிலிருந்து இது ஆசிரியர்களினால் போதிக்கப்டல் வேண்டும்.ஒரு சமுதாயத்தின் விழிமியங்கள் இவ்வாறான மோசமான செயற்பாடுகளினால் கேள்விவிக்குளாக்கப்படுவதுடன் சகோதர இனங்களினால் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றோம்,
    எல்லா விடயங்களும் எமது மார்க்கதில் சொல்லப்படுகிறது என்று இலகுவான விடையாயில்லாமல் ஒவ்வொருவரும் இந்த விடயங்களை நடைமுறைப் படுத்தல் வேண்டும்

    ReplyDelete
  9. English enbatu ella makkalukkum teriyatu. Enawe ungal COMMAND TAMILIL TAMIL WAARTAYIL ENGLISHIL PATIWU SEYTHAL NALLATU.UNGAL VIRUPPAM.

    ReplyDelete
  10. "Thottil pazhakkam sudukaadu varai." Our society is
    not a self-respecting society .Go to a Sinhala
    village and then look at your village , you will
    see the difference . Muslims think washing after
    urinating is the only cleanliness and nothing else
    is any important and if you don't have a dog you
    are super clean ! Wake up ! Just wake up ! Look
    around and learn ! Make your own surroundings a
    clean and healthy one so that it will at least
    not be unhealthy for you and your family .Let
    your children look at you and learn it from you.
    Get married for a reason and not because others
    do it . Our community is so backward about their
    home cleanliness .

    ReplyDelete
  11. Our Ahlaq has become so low when we see how our people behave even inside the mosques. During last Eid qutba, few a gang of children were seated in front of me jabbering and two of them were brosing facebook. This is the problems caused by the parents not bringing up the children in Islamic environment.

    ReplyDelete

Powered by Blogger.