மைத்திரியை யாரென்று கூட தெரியாது, எமது இனத்தின் கடவுளே மஹிந்த - ஆதிவாசிகள்
தமது ஆதிவாசிகள் இனத்திற்கு மஹிந்த செய்த உதவியின் காரணமாக அவர் தமது இனத்திற்கு கடவுள் என ரத்துகுல ஆதிவாசிகளின் தலைவர் சுதா வன்னியலஎத்தோ தெரிவித்துள்ளார்.
தமது ஆதிவாசிகள் இனத்திற்கு எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் மஹிந்தவை சந்தித்துகதைத்தால் அதற்கு அவர் உடனடி தீர்வைப் பெற்றுத் தந்ததாகவும் அவர் மேலும்குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தற்போது உள்ள ஆட்சியாளர்களை சந்திப்பதற்கோ அல்லது தமது ஆதிவாசிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கோ எவரும் இல்லை என்றும் அவர்தெரிவித்துள்ளார்.
நாம் இருக்க வீடு இன்றி, மின்சாரம் இன்றி வாழ்ந்த போது கடவுளாக வந்தவரே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்போதைய பிரதமர், ஜனாதிபதி யாரென்றே தமது இனத்திற்கு தெரியாதுள்ளதாகவும், வெறுமனே அவர்களுடைய பெயர்களை மாத்திரமே கேட்டுள்ளதாகவும், தமது பிரச்சினைகள் தொடர்பில் அவர்களை சந்திக்க தமக்கு அனுமதிவழங்கப்படுவதில்லை என்றும் ரத்துகுல ஆதிவாசிகளின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆக, மொத்தத்தில், மஹிந்தவுடன் எஞ்சியிருக்கும் மிச்ச சொச்சம் முஸ்லிம்களும் ஷிர்க்கிற்குப் பயந்து பாய்ந்து ஓடிவிடுவர் போலிருக்கிறது!
ReplyDelete