Header Ads



முஸ்லிம்களின் தலாக் - விவாகரத்தை சீர்திருத்துவதற்கு, உண்மையான முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு

முஸ்லிம்களின் தலாக் விவாகரத்து முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பெண்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதனுடன் பொது சிவில் சட்டத்தை தொடர்புபடுத்தி பார்க்கக் கூடாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தலாக் முறை தொடர்பான வழக்கில் மத்திய அரசின் கருத்தை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது. இதற்கான பதிலை சட்ட அமைச்சகம் இந்த மாத இறுதியில் முறைப்படி உச்ச நீதிமன்றத்தில் அளிக்க இருக்கிறது.

முன்னதாக, உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தலாக் முறையில் விவாகரத்து செய்யப்பட்ட சாய்ரா பானு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். அதில், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று அவர் கூறியிருந்தார். இதேபோல ஜெய்ப்பூர், கொல்கத்தாவைச் சேர்ந்த இரு பெண்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதனை எதிர்த்து ஜாமியத்-உலேமா-ஏ-ஹிந்த், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. அதில், "சீர்திருத்தம் என்ற பெயரில் தனிப்பட்ட சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்படக் கூடாது. முஸ்லிம் தனிநபர் சட்டம் என்பது குரானில் இருந்து எடுக்கப்பட்டது. எனவே, அதனை யாரும் பரீட்சித்துப் பார்க்கக் கூடாது' என்று வலியுறுத்தப்பட்டது.

எனினும், பாரதிய முஸ்லிம் பெண்கள் அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடத்தியது. அதில், தலாக் முறையை ஒழிக்கக்கோரி 50 ஆயிரம் முஸ்லிம் பெண்களும், ஆண்களும் கையெழுத்திட்டனர்.

4 comments:

  1. அல்லாஹ்வின் சட்டத்தில் கை வைக்க யாருக்கும் உரிமை கிடையாது.அதை மீறுதல் குப்றியத்தில் சேர்க்கும்.எச்சரிக்கை

    ReplyDelete
  2. Who are these puppets? Man makes law unequivocally go to the pitfall. No one has the privilege either breach or alter the Allah's command.

    ReplyDelete
  3. செருப்புக்கேற்றபடி பாதங்களை வெட்டிக்கொள்வதுதான் விவேகமா என்ன..?

    ReplyDelete
  4. குர்ஆனில் சொல்லுகின்ற தலாகிற்க்கும் நாம் இப்போ சொல்கின்ற தலாகிற்க்கும் வித்தியாசம் இருக்கின்றது தலாக் தலாக் தலாக் என்று மூன்று முறை சொன்னால் தலாக்காகுமா?

    ReplyDelete

Powered by Blogger.