Header Ads



என்னப்பா மைத்திரி, இப்புடி பன்றீங்களே...!

குருணாகல் நகரில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 வது மாநாட்டிற்கு மக்கள் கூட்டத்தை வரவழைப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதால், பல்வேறு சிறப்புரிமைகள் மற்றும் அன்பளிப்புகளை கொடுத்து கூட்டத்தை சேர்க்கும் நடவடிக்கையில் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

பதுளை மாவட்டத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஆட்சேர்ப்பதாக கூறி, விண்ணப்பப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் வழிநடத்தலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

காலியை அடிப்படையாக கொண்டு தென் மாகாணத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி கூட்டம் சேர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல், கேகாலை, மாவனெல்லை, அரநாயக்க, ருவான்வெல்ல பிரதேசங்களில் இளைஞர், யுவதிகளுக்கு இலங்கை மின்சார சபைக்கு ஆட்சேர்ப்பதற்காக விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை பிரதேசத்தில் இலங்கை துறைமுக அதிகார சபையில் தொழில் வழங்கும் விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே எதிர்வரும் 4ம் திகதி குருணாகல் நகருக்கு மக்களை அழைத்து வர நேரடியாக களத்தில் இறங்கி செயற்படுமாறு அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க சமுர்த்தி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

3 comments:

  1. நாய்கள் வாலை நிமிர்த்த,முடியாது சட்டிகள் மாறினாளும்,எச்ச,நாய்கள் ,எல்லாம் ஒன்றுதான்

    ReplyDelete
  2. ராஜபக்‌ஷவை ஓரங்கட்ட நடக்கும் விளையாட்டுக்கள்.
    உனக்கேன் வலிக்குது
    அடக்கி வாசி சகோதரா

    ReplyDelete
  3. ராஜபக்‌ஷவை ஓரங்கட்ட நடக்கும் விளையாட்டுக்கள்.
    உனக்கேன் வலிக்குது
    அடக்கி வாசி சகோதரா

    ReplyDelete

Powered by Blogger.