Header Ads



அமெரிக்கா எப்போதும் உங்களுடன் நிற்கும் - மைத்திரிக்கு தைரியமூட்டிய ஒபாமா

நிலைமாறு கட்டத்தில் உள்ள சிறிலங்கா உலகின் ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக விளங்குவதாக, அமெரிக்க அமெரிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடமே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெறவுள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், உலகத் தலைவர்களுக்கு அளித்த விருந்துபசாரத்தில், சிறிலங்கா அதிபரைச் சந்தித்த போதே, அமெரிக்க அதிபர் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏனைய நாடுகளுக்கு சிறிலங்கா முன்னுதாரணமாக விளங்குகிறது என்றும், எப்போதெல்லாம் எமக்கு உதவிகள் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அமெரிக்கா எம்முடன் இருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டதாக, சிறிலங்கா அதிபர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

அதேவேளை, அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல், கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே ஆகியோரையும், சி்றிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேசியுள்ளார்.

அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனையும் சிறிலங்கா அதிபர் நியூயோர்க்கில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இதன் போது, சிறிலங்காவுடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்துக்கு எந்த விரிசலும் கிடையாது என்று, செயிட் ராட் அல் ஹுசேன் குறிப்பிட்டதாகவும் சிறிலங்கா அதிபர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.