Header Ads



"நான் தூங்கிக் கொண்டிருந்தேன் என்றுகூறி, எவரும் சமாளிக்க முடியாது" - மஹிந்த

எனது ஆட்சியில் அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அன்று அமைச்சரவையில் அங்கம் வகித்த இன்றைய ஜனாதிபதியும் சு.க. அமைச்சர்களும் பொறுப்புக் கூற வேண்டும். அது எனது முடிவல்ல; எனக்குத் தெரியாது என சமாளித்து எவரும் தப்பிவிட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஹசலக்க பகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:

நல்லிணக்கத்தின் பெயரால் ஓர் இனத்தை அழிக்க இடமளிக்க முடியாது. உண்மையான நல்லிணக்கம் இது வல்ல.

ஐ.தே.க.வும் சு.க.வும் இணைந்து அரசாங்கம் அமைத்த போதும் ஐ.தே.க.வின் கொள்கையில் சிறிய மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் சு.கவினர் தமது கொள்கைகளை மாற்றி மக்களுக்கு எதிராக கொண்டு வரும் சகல நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக கைதூக்குகின்றனர். ஆனால் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்தரப்பில் இருந்து நாம் எதிர்த்து வருகிறோம்.

எம்முடன் இருந்த சிலர் அப்பட்டமாக பொய் கூறத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போதைய ஜனாதிபதி முதல், அமைச்சர்கள் வரை அன்று எனது அமைச்சரவையில் இடம்பிடித்திருந்தார்கள். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சகல முடிவு களுக்கும் இவர்கள் பொறுப்புக் கூற வேண்டும்.

அதனை விடுத்து அது எனது தனிப்பட்ட முடிவல்ல. இது எனக்குத் தெரியாது நான் தூங்கிக் கொண்டிருந்தேன் என்று கூறி எவரும் சமாளிக்க முடியாது. எந்த ஆட்சிக் காலத்தில் நாட்டுக்கு சேவை நடந்தது என்பதை எமக்கு கூறத் தேவையில்லை. சுதந்திரக் கட்சியின் கொள்கை எமது பக்கத்தினாலே நிறைவேற்றப்படுகிறது .கட்சி கொள்கையை பாதுகாப்பது எமது பொறுப்பாகும் என்றார்.

4 comments:

  1. ஆஹா என்னமாதிரியான தர்க்கம். கியலா வெடக்கன மாத்தையோ. இப்படியெல்லாம் சொல்லி நீர் செய்த அதிகார துஸ்பிரயோகத்தை மறைக்க முட்படாதே...! உமக்கு கொஞ்சமும் மரியாதை வேணும் என்றால் அரசியலில் இருந்து ஒதிங்கிக் கொள்ளும்.

    ReplyDelete
  2. ஆஹா என்னமாதிரியான தர்க்கம். கியலா வெடக்கன மாத்தையோ. இப்படியெல்லாம் சொல்லி நீர் செய்த அதிகார துஸ்பிரயோகத்தை மறைக்க முட்படாதே...! உமக்கு கொஞ்சமும் மரியாதை வேணும் என்றால் அரசியலில் இருந்து ஒதிங்கிக் கொள்ளும்.

    ReplyDelete
  3. Remember.. in future.

    If you become minister and sit in parliament... Any wrong action he his going to make and ask or force you to raise your hand to support his decisions.. be aware of above standard of former president now.

    ReplyDelete
  4. Unakku irunda payaththukkaha nee seitha ella watrukkum mp margal kayya uyartinargal. Eppo awanga meel paliya poda wendram. Janadipati yaha irunda nee than ellawatrukkum patil solla wendrum.

    ReplyDelete

Powered by Blogger.