ஐரோப்பிய வாழ் யாழ்ப்பாண, முஸ்லிம்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்கள்..!
-தகவல் உதவி - ஜவாமில்-
பிரான்ஸில் செப்டெம்பர் 3,4 ஆம் திகதிகளில் நடைபெற்ற ஐரோப்பிய வாழ் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கான ஒன்றுகூடலின போது கீழ்வரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
பிரான்ஸில் செப்டெம்பர் 3,4 ஆம் திகதிகளில் நடைபெற்ற ஐரோப்பிய வாழ் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கான ஒன்றுகூடலின போது கீழ்வரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
யாழ்ப்பாண முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகம், யாழ்ப்பாணம்தான் என்பதை மீண்டும் உறுதிபட உறுதிப்படுத்துகிறோம்.
யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களுக்கு ஐரோப்பிய வாழ் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது முழு ஆதரவை வெளிப்படுத்தி நிற்கிறார்கள்
யாழில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களுக்கும், மீள்குடியேற காத்திருக்கும் முஸ்லிம்களுக்கும் அரசாங்கம் எவ்வித பாரபட்சமுமின்றி உதவிகளை வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
1990 ஆம் ஆண்டு புலிகளின் இனச்சுத்திகரிப்புக்கு உளளான முஸ்லிம்களின் சொத்துக்களுக்கான பெறுமதி கண்டறியப்பட்டு அதற்கான நஷ;டஈடு வழங்கப்படுவதுடன், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க அரசாங்கம் உறுதிமொழி வழங்க வேண்டும்.
யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீது, தமிழ் அதிகாரிகள் மேற்கொள்ளும் பாரபட்சமான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
யாழ்ப்பாண முஸ்லிமகள் விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடுதல் கவனமெடுத்து செயற்ட வேண்டுமென வற்புறுத்துகிறோம்.
யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாகவுள்ள அத்தனை சதிகளும் முறியடிக்கப்பட வேண்டுமென வற்புறுத்துகிறோம்.
யாழ்ப்பாணத்திலும், யாழ்ப்பாணத்திற்கு வெளியேயும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்காக செயற்படும் அமைப்புக்களுக்கும், தனிநபர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறோம்.
யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு, அடைக்கலம் தந்த அத்தனை ஊர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
போலியான பேஸ்புக் முகவரிகள் மூலம் யாழ்ப்பாண முஸ்லிம்களை குழப்பியடிக்கும் விஷமிகளை கண்டிப்பதுடன், இதுபோன்ற அசிங்கமான செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ளுமாறும், இதுபோன்ற பேஸ்புக் பக்கங்களை புறக்கணிக்குமாறும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
Well done ..it is great initiative.
ReplyDeleteI think from dawa point of view Muslim should go and settle down in all part of North...not only jaffna..where ever they lived before 1990..
But outside Muslim community did their best to help out for Muslims who came in thousands..specially people In putteam and Negambo did a great service ..
You should send them some letters of thank from France if you can ...it would be great ..
But Muslim politicians did nothing ..or they did very little ..
No.political.influence was used to help displaced people ..
Not even 25 people....hahaha
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமாஷா அல்லாஹ் உங்களின் சேவைகள் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.உங்களுக்குள் ஒற்றுமையையும்,பரஸ்பர உறவையும்,அல்லாஹ் உள்ளத்தில் ஏற்ப்படுத்த் வேண்டும்.சகோதரத்துவத்தோடு இந்த பொது வேலையை செய்ய அல்லாஹ் உங்களுக்குள் தக்வாவையும் இஹ்லாசையும் தந்தருள்வானாக.ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
ReplyDeleteMAHENDRAN இவர்கள் ஒரு ஆள் இருநூறு பேருக்கு சமம் உங்களின் கணக்குப்படி 25*200=5000 பேர் புரியுமா அல்லது விளக்கமாக சொல்ல வேண்டுமா? இந்த ஐயாயிரத்துக்கும் ஒவ்வொன்றுக்கும் இருநூறு பேர் வெளியில் ஆட்டம் காணாத உறுதியான ஒற்றுமையுள்ளவர்கள் இருக்கிறார்கள்.5000*200=1000000 TOTAL புரியுமா?
ReplyDeleteWell done. Doesn't matter how many in numbers. Be UNITED and go to future and help our own needy/affected people and also other people.
ReplyDeleteGreat unity.
Enter your comment...மகேந்திர நல்ல நெஞ்சு உமக்கு..
ReplyDeleteவெகு சொற்ப அளவில் மீள்குடியேறியுள்ள யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமக்குள் பல சிறு சிறு அரசியல், சுயநலக் குழுக்களாக பிரிந்து முரண் பட்டுக்கொண்டு அவமானப்பட்டுப் போயிருப்பதனை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. இதன் காரணமாக இந்த மக்களால் எதனையும் சாதிக்க முடியாமல் உள்ளது.
ReplyDeleteமகேந்திரன் அவருடை அறிவுக்கேற்ப விகிதாசாரப்படி யோசித்து கூறியுள்ளார் அவரை குறை கூறுவது தவறு,ஒவ்வொரு வருக்கும் உள்ள அறிவுதான் அந்த வகையில் அவரிடம் உள்ள சரக்கு அம்புட்டுத்தான் இந்த லிஸ்டில் உள்ளவர்தான் அஜன் அந்தோனிராஜ் இதை முதலில் விளங்கிக்கொள்ளுங்கள்,
ReplyDelete