எந்தவிலையானாலும் பொதுமக்களை பாதுகாக்க, இராணுவம் அர்ப்பணிப்பாக உள்ளது - இராணுவத் தளபதி
நாட்டின் நலன்களை கருத்திற்கொண்டு ஒருமைப்பாட்டை காப்பதற்கான தயார் நிலையில்உள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இராணுவத்தை பொறுத்தவரையில் எந்தவிலையானாலும் பொதுமக்களை பாதுகாக்க இராணுவம்அர்ப்பணிப்பாகவே உள்ளது என்று இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிறிசாந்த டிசில்வா தெரிவித்துள்ளார்.
வடக்கின் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற எழுத தமிழ் நிகழ்வுகுறித்த கேள்வி ஒன்றுக்கே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாக்கும் கடமை இராணுவத்துக்கு உண்டு என்ற அடிப்படையில் இராணுவதளபதியாகிய தாம் அதனை உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இந்தக் கருத்துக்களைவெளியிட்டார்.
Post a Comment