மோடியின் இந்தியாவில், மற்றுமொரு அவலம்...!
தந்தையின் சடலத்தை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் தராததால், கைவண்டியில் வைத்து மகன் கொண்டு சென்ற அவலம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் பிலிபித் மாவட்டம் மதினாஷா பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி துளசிராம் 70, உடல்நலக்குறைவால் நேற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மகன் சூரஜூடன் வந்தார். காலை 8 மணிக்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் தாமதம் செய்ததால், காலை 11 மணியளவில் இறந்தார். சூரஜ், தனது தந்தை சடலத்தை வீட்டிற்கு எடுத்துச்செல்ல மருத்துவமனை ஆம்புலன்ஸ் தருமாறுகேட்டார். மருத்துவமனை நிர்வாகம் அவரை 2 மணி நேரம் அலை கழிக்க வைத்து கடைசியில் எந்த வாகனமும் இல்லை என கூறியது. வேறு வழியின்றி தந்தை சடலத்தை கை வண்டியில் வைத்து தனது நண்பர்கள் உதவியுடன் வீட்டிற்கு கொண்டு சென்றார். இக்காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு ஒடிசாவில் மனைவி சடலத்தை தோளில் சுமந்து10 கி.மீ.சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பினைஏற்படுத்தியது. அதே போன்று நேற்று உ.பி.யில் அவலம் அரங்கேறியுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில், சம்பவம் நடந்ததாக புகார் யாரேனும் அளித்தால் உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்றார்.
Post a Comment