Header Ads



ஜனாதிபதியின் இணையத்தில் ஊடுருவிய மாணவனை, நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும் - சந்திரிக்கா

-Tw-

ஜனாதிபதியின்  இணையத்தளத்துக்குள் ஊடுருவிய மாணவனின் இயலுமையை நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும் - சந்திரிக்கா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்துக்குள் ஊடுருவிய மாணவன் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த மாணவனின் இயலுமையை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள வெயாங்கொட மகா வித்தியாலயத்தில் தொழிநுட்ப பிரிவை பார்வையிட சென்ற போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எல்லா மக்களும் தொழில்நுட்பத்தை நல்ல முறையிலும் தீய முறையிலும் பயன்படுத்துகின்றனர், தீய விடயங்களை இல்லாமல் செய்வதற்கு அரசு கட்டாயம் தலையிட வேண்டுமென சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இதையே சிறுபான்மையை சேர்ந்த ஒரு மாணவன் செய்து இருந்தால் பயங்கரவாத தடுப்பு சட்டம் பாய்ந்து இருக்கும் BBS க்கும் இனவாத ஊடகங்களுக்கு வாய்க்கு அவல் கிடைத்தமாதிரித்தான் இருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.