Header Ads



முருகானந்தத்திற்கு, இன்ப அதிர்ச்சிகொடுத்த அரபி (படங்கள்)


தமிழகத்தை சேர்ந்த முருகானந்தம் அருண் என்ற சகோதரர் குவைத்திலுள்ள ஒரு அரபி வீட்டில் டிரைவராக பணி புரிந்துள்ளார்.

கடந்த 24.09.2016 அன்று முருகானந்தத்தின் மொபைலுக்கு போன் செய்த அரபி முதலாளி வீட்டுக்குள்ளே வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

என்னவோ, ஏதோ என்று நினைத்து உள்ளே சென்ற முருகானந்தத்தை குடும்பத்திலுள்ள அனைவரும் வரவேற்றுள்ளனர்.

முருகானந்தத்திற்கு எதுவுமே புரியவில்லை,

திடீரென அரபி முதலாளி முருகானந்தத்தை ஆரத்தழுவி கட்டியணைத்து நீ வேலைக்கு சேர்ந்து இன்றோடு 12 ஆண்டுகள் ஆகிவிட்டது.

அதை கொண்டாடும் விதமாக தான் இந்த ஏற்பாடு என்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்த நாளை கொண்டாடும் விதமாக குடும்பத்துடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. கேக்கை முருகானந்தம் வெட்டியுள்ளார்.

அரபி முதலாளி கேக்கை முருகானந்தத்திற்கு தம்முடைய சகோதரனை போன்று ஊட்டிவிட்டுள்ளார்.

பின்னர் முருகானந்தத்திற்கு அன்பளிப்பு தொகை, புதிய செல்போன் போன்ற பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

முதலாளியின் குடும்பம் தம் மீது வைத்த பாசத்தையும், அவர்களின் நடவடிக்கையும் 
 கண்டு முருகானந்தம் ஆனந்த கண்ணீர் வடித்தார்.



2 comments:

  1. Allah awarukku hidayathai walanagattum

    ReplyDelete
  2. Muruganandam should have worked hard and honestly to earn this appreciation. Well done Muru..

    ReplyDelete

Powered by Blogger.