கிறிஸ்த்தவ முதியவரின் உள்ளத்தை கவர்ந்திழுக்கும் அல்குர்ஆன் (அற்புதமான வீடியோ)
குர்ஆன் ஓதபடுவதை செவியுற்ற ஸ்பெயின் கிருத்துவ சமுதாய பெரியவர் குறிப்பிடுகிறார்.
குர்ஆனின் வார்த்தைகளின் பொருட்களை நான் உணரவில்லை ஆயினும் குர்ஆன் எனது உள்ளத்தை கவர்ந்து இழுக்கிறது..!
https://www.youtube.com/watch?v=yi7bfvR8gaU
يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ (57) மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும்,உள்ளங்களில் உள்ளதற்கு நோய்நிவாரணமும்,நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியும்,அருளும் வந்துவிட்டன ( யூனுஸ் )[ வசனம் 57] இப்படி அல்லாஹுதாலா அல் குர்ஆனின் தார்கம் கூறிவுள்ளான் எனவே அன்னிய சமூகங்களுடன் வாழும் முஸ்லிம்களே! உங்களின் வீடுகளில்,கடைகளில்,காரியாலங்களில் அழகிய குறல்மிக்க கிராத்துகளை போட்டு மற்றவர்களை செவியுர செய்யுங்கள் உண்மை மார்கத்தை தேடும் யாருக்காவது அதன் மூலம் நேர்வழி கிடைக்கலாம்.
ReplyDeleteடாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
2. ஸூரத்துல் பகரா (பசு மாடு)
மதனீ, வசனங்கள்: 286
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
2:1
2:1 الٓمّٓۚ
2:1. அலிஃப், லாம், மீம்.
2:2
2:2 ذٰ لِكَ الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ
2:2. இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
2:3
2:3 الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۙ
2:3. (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
2:4
2:4 وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَۚ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَؕ
2:4. (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
2:5
2:5 اُولٰٓٮِٕكَ عَلٰى هُدًى مِّنْ رَّبِّهِمْ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
2:5. இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
Quran is the blessing from Allah for whole humankind.
ReplyDelete