அரசாங்கத்தில் மஹிந்தவின் உளவாளி, பைல்களுடன் வந்த பசில்..!
சமகால அரசாங்கத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உளவாளி ஒருவர் செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் கடந்த புதன்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயராம வீட்டில் நடைபெற்றது.
இந்த சந்தர்ப்பத்தில் தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார், உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க உட்படல சில இணைந்துக் கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பில் கை நிறைய பல கோப்புகளுடன் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இணைந்துக் கொண்டிருந்தார். கடந்த காலங்களில் புதிய சக்தி தொடர்பில் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் முடிவுகள் உள்ளடக்கிய குழுவின் தீர்மானங்களே பசிலின் கையில் கொண்டுவந்த கோப்புகளில் காணப்பட்டுள்ளன.
விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த கூட்டத்தின் போது, தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பொன்று கிடைத்துள்ளது. அன்றையதினம் மாலை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள் இடையில் இடம்பெற்ற கூட்டம் தொடர்பில் தகவல் வெளியிடுவதற்காகவே இந்த தொலைப்பேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“எதிர்வரும் நாட்களில் உள்ளூராட்சி தேர்தல் இடம்பெறப்போவதில்லை எனவும் மக்கள் வாக்கெடுப்பு ஒன்றே அங்கு இடம்பெறவுள்ளதாகவே அங்கு கூறப்பட்டது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இந்த நேரத்தில் இரத்து செய்தால் அது மஹிந்த ராஜபக்சவுக்கு சாதகமாகிவிடும் எனவும் கூறப்பட்டது” என அந்த தொலைப்பேசி அழைப்பில் கூறப்பட்டுள்ளது.
தொலைப்பேசி அழைப்பு நிறைவடைந்தவுடன் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடம் தொலைபேசி ஊடக பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலை வெளியிட்டார். எனினும் தொலைப்பேசி அழைப்பேற்படுத்தியது யார் என்பதனை மஹிந்த அங்கு யாருக்கும் கூறவில்லை. அதன் பின்னர் பசில் புதிய சக்தியின் தீர்மானத்தை சமரப்பித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் எந்த ஒரு தேர்தலிலும் தனியாக போட்டியிடுவதற்கும், கூட்டு எதிர்கட்சியின் நோக்கத்தை சமூகத்திற்கு கொண்டு செல்லும் முறையில் அமைப்பாக வேண்டும் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இந்த புதிய சக்தியை பதிவு செய்யும் முறை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிமை மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டனர். அந்த சந்தர்ப்பத்தில் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு சென்ற நாமல் அங்கு சென்ற 2 மணித்தியாங்களுக்கு பின்னர் மஹிந்தவுக்கு அழைப்பேற்படுத்தியுள்ளனர்.
“அப்பா நான் வெளியே வந்துவிட்டேன்”... என நாமல் மஹிந்தவுக்கு கூறும்போது “இவ்வளவு சீக்கிரம் வெளியே வந்துவிட்டீர்களா?” என மஹிந்த நாமலிடம் வினவியுள்ளார். “ஆம் ஓக்டோபர் 3ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அழைத்துள்ளனர். என நாமல் கூறியதும். ஏன் ஒக்டோபர் என்ன என்று மஹிந்த வினவியுள்ள போது... ஒக்டோபர் வரவு செலவு வருகின்றதல்லவா அதனால் தான் என நாமல் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment