புலி ஆதரவாளர்ளுக்கு அரசாங்கம் செலவிடுகின்றது - விமல்
புலிகளின் ஆதரவாளர்களுக்காக அரசாங்கம் செலவு செய்வதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய வலையமைப்பினது பத்து உறுப்பினர்கள் அமெரிக்காவின் நியூயோர்க்கில் விடுமுறையை கழித்து வருகின்றனர் எனவும் இந்த பத்து உறுப்பினர்களும் அமெரிக்காவில் விடுமுறையை கழிப்பதற்கான செலவுகளை அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் பொறுப்பெற்றுக் கொண்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
வொஸிங்டனின் ஹில்டன் ஹோட்டலில் இந்த பத்து உறுப்பினர்களும் தங்கியிருப்பதாகவும் இந்த ஹோட்டல் செலவு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசாங்கம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் உள்ளிட்ட பத்து புலி ஆதரவு வலைமையப்பைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு விடுமுறையை கழிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கில் 78 ஏக்கர் காணியை சுரேன்சுரேந்திரனுக்கு வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வாக்குறுதி அளித்துள்ளார் என விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
சுரேன் சுரேந்திரனுடன் மங்கள சமரவீர அமெரிக்காவில் நான்கு மணித்தியால பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்
What a great lyer.
ReplyDelete2005 janadipati waranaya warjanaya karawanna mahinda kotiyoth ekka million 800 givisungahanakota weerawansa koheda hitiye.den baila gahanawa.
ReplyDelete