Header Ads



வெண்தாமரையை கையில் எடுக்கும், ஒரு சிவப்பு மனிதன்

-Vi-

தனித்துவமான அரசியல் கட்சி மற்றும் சின்னத்துடன் எதிர் கால அரசியல் செயற்பாடுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார். 

மஹிந்த சிந்தணை கொள்கை திட்டத்தில் காணப்படும் வெண்தாமரையை சின்னமாக கொண்டு புதிய பிரவேசத்திற்கு தயாராகும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர் கட்சியினர் எதிர்கால அரசியல் திட்டகளின் இரகசியங்களை பாதுகாப்பதில் மும்முரமாக உள்ளனர்.  

ஏனெனில் எதிரியின் கையில் இரகசியங்கள் சென்று விட கூடாது என்பதே தற்போதைய இலக்காக காணப்படுகின்றது.

 அதிகாரத்தை தன்வசப்படுத்திக் கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் போராட்டதை மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுக்கும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். 

2004 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடமிருந்து அதிகாரத்தை தன்வசப்படுத்திக் கொள்வதற்காக கடுமையாக மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டார். 

ஏனெனில்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்குவதற்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சற்றும் விரும்ப வில்லை. அன்றைய நாட்களில் கடுமையான உள் கட்சி மோதல்கள் தலைத்தூக்கியது. 

 தனக்கு சார்பான சூழலை உருவாக்க கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் இருந்து கீழ் மட்ட உறுப்பினர்கள் வரை குறி வைத்து அவர்களை தனக்கு ஆதராவானர்களாக மாற்றினார் . 

இதன் ஊடாக இறுதியல் 2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்டு வெற்றிப் பெற்றதுடன்  சுதந்தர கட்சியை முழு அளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். 

இதனால் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்சியை விட்டுக் கொடுத்து கட்டாயமாக ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  

 தற்போது மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான 2 ஆம் கட்ட நகர்வுகளை மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார். 

அன்று எவ்வாறு கட்சி உறுப்பினர்களில் பெரும்பான்மையான ஆதரவுகளை தன்வசப்படுத்த செயற்பட்டாரோ அதே உத்திகள் இன்றும் கையாளப்படுகின்றது. 

மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து நீங்கிய விமல் வீரவன்ச மற்றும் ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து பிரிந்த உதய கம்மன்பில உள்ளிட்ட இடதுசாரி அரசியல் கட்சிகளை  பங்காளிகளாக மஹிந்த கொண்டுள்ளார். 

 மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களின் பாராளுமன்ற உறுப்புரிமைகளை அடுத்த பொது தேர்தல் வரை பாதுகாத்துக் கொள்ள வேண்டியதன் தேவையை கருத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சியின் கடுமையான நடவடிக்கைகளுக்குள் சிக்காமல் இருப்பதற்கும் உபாய முறைகள் கையாளப்பட்டுள்ளது.

 பொது தேர்தலில் தோல்வியடைந்தும் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இல்லாத பசில் ராஜபக்ஷ , பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் களைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை முன்னணியாக கொண்ட புதிய கட்சிக்கான நகர்வுகளை வெற்றிக்கரமாக முன்னெடுத்துள்ளார். 

எனவே அடுத்த மாதம் 8 ஆம் திகதி ஏலியகொடையில் நடைப்பெறப்பெறவுள்ள கூட்டு எதிர் கட்சியின் ' போராட்டஙகளை வெற்றிக் கொள்ளும் புதிய மக்கள் சக்தி " கூட்டத்தில் தாமரை சின்னம் அங்குரார்ப்பணம் செய்யப்படும் . 

 மேலும் ரணில் - மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுப்பதற்கும் தேர்தல்களில் போட்டியிடுவதற்குமான நடவடிக்கைகள் தாமரை சின்னத்தின் ஊடாகவே ஒக்டோபர் மாத்திற்கு பின்னர் முன்னெடுக்கப்படும். 

ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் இந்த அரசியல் நகர்வுகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரானவை அல்ல என்பதே உண்மை. 

No comments

Powered by Blogger.