என்னை சந்திக்கும் முஸ்லிம் காங்கிரஸ், போராளிகள் அழுகிறார்கள் - முபாறக் மஜீத்
ஒரு காலத்தில் கிழக்கில் பாரிய செல்வாக்கில் இருந்த ஐ தே கவை அழித்து அந்த இடத்திற்கு முஸ்லிம் காங்கிரசை கொண்டு வந்த தலைவர் அஷ்ரபை மறந்து இன்று மு காவின் இடத்துக்கு ஐ தே கவை கொண்டு வரும் எட்டப்பர் வேலையை இன்றைய மு கா தலைவர் செய்கிறார் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கட்சியின் கல்முனை தலைமையகத்தில் நடைபெற்ற ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஐ தே க ஓரம் கட்டுகிறது என கூறியே அக்கட்சியை ஒதுக்கும்படி முஸ்லிம்களிடம் கூறிய தலைவர் அஷ்ரப் கிழக்கு இளைஞர்களின் பாரிய தியாகம் காரணமாக அந்த இடத்திற்கு மு காவை கொண்டு வந்தார். இதற்கான அவரது போராட்டத்தில் நாமும் இணைந்து செயற்பட்டோம்.
ஐ தே கவை தலைவர் வெறுத்தாலும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை உள்ளூர விரும்பினார். இதன் காரணமாகவே 1994ம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகரின் மகளான சந்திரிக்காவை ஆட்சிக்கு கொண்டு வர ஒத்துழைத்தார்.
இதனை நன்கு புரிந்து கொண்ட ஐ தே க தனது எட்டப்பரான ஹக்கீமை மு காவுக்குள் புகுத்தியதன் விளைவாக தலைவர் அஷ்ரஃப் கொல்லப்பட்டார். ஆனாலும் அந்த தேர்தலிலும் சுதந்திரக்கட்சியின் கூட்டே வெற்றி பெற்றதன் காரணமாக மீண்டும் குழப்பங்கள் செய்து ஆட்சியை குழப்பி ஐ தே க ஆட்சிக்கு வர உதவினார். அதுவும் இடையில் இழந்து போனதால் மஹிந்த ஆட்சியுடன் இணைந்து விட்டு திடுதிப்பென மீண்டும் பாராளுமன்றத்தில் ஐ தே க பக்கம் தாவினார். அது கை கூடாமல் போகவே 2008ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐ தே கவை ஆட்சிக்கு கொண்டு வர முயன்று அதிலும் தோற்றுப்போனார்.
ஒரு கட்சியை மாற்றுவது என்பதற்கான முயற்சி ஜனநாயக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அதனை நாம் குற்றமாக கூறவில்லை. அவரது அனைத்து திட்டங்களும் தான் ஒரு ஐ தே க ஏஜன்ட் என்ற ரீதியில் அமைந்ததைத்தான் கூறுகிறோம். அதே அடிப்படையில்தான் கல்முனையில் பல மு கா பழைய போராளிகள் இருக்கும் நிலையில் அவர்கள் எவரையும் நம்பாமல் முஸ்லிம் காங்கிரசை குழி தோண்டி புதைக்க முற்பட்ட ஐ தே க காரர்களுக்கு அவர்களின் புத்திரர்களுக்கும் பதவிகளை வழங்கி தன்னை தலைவராக்க மறைமுகமாக உதவி செய்த ஐ தே கவுக்கு விசுவாசமாக உள்ளார்.
எம்மை சந்திக்கும் பல மு கா போராளிகள் அழுகிறார்கள். கல்முனையில் அமைச்சரின் இணைப்பாளராக கடமையாற்ற ஐ தே க வாரிசுதான் கிடைத்தாரா ? அவருக்கு பழைய போராளிகள் எவரையும் தெரியாது என்பதால் எம்மை ஓரம் கட்டுகிறார் என்றும் கூறி இதனை தட்டிக்கேளுங்கள் என சொல்கிறார்கள். மு காவை வளர்த்தெடுப்பதில் ஒரு காலத்தில் பாரிய சேவைகளை செய்தவன் என்ற வகையில் இந்த அநியாயத்தை சுட்டிக்காட்டுவது எனது கடமையாகும் என மௌலவி முபாறக் தெரிவித்தார்.
நியாயமான கருத்துக்கள்
ReplyDeleteமுபாரக் மஜீத் அவர்களே, தயவு செய்து மக்களுக்கு பிழையான தகவல்களை வழங்காதீர்கள். நீங்கள் கூறுபவர் கல்முனையை ஆண்ட பரம்பரையை சேர்ந்தவர். ஒரு கண்ணியமான அரசியல் வாதியின் மகன் ( தலைவர் அஷ்ரபின் மகன் முறை உறவுக்காரரும் கூட). உம்மை போல் ஒரு நாளைக்கு ஒரு கட்சியில் அலைந்து திரிபவரும் அல்ல. எதட்கும் நீங்கள் ஒரு பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியரை போய் பாருங்கள். தயவு செய்து ஊரில் உள்ள பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியரை பார்க்காமல் வெளி ஊரில் உள்ள பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியரை பாருங்கள். ஏனெனில் பிறகு ஊரில் உள்ள பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் அந்த வைத்தியரை பற்றியும் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி அறிக்கைகள் விட்டு அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியருக்கும் பைத்தியம் பிடித்திரும்.
ReplyDeleteதலைவர் விபத்தில் மரணித்ததும் அதே சுதந்திர கட்சி ஆட்சியில் தான். விபத்தை விசாரணை செய்யாமல் மூடி மறைத்ததும் அதே சுதந்திர கட்சி ஆட்சியில் தான். நீங்கள் யாருக்கு பக்க வாத்தியம் வாசிக்க வருகின்றீர்கள் என்று விளங்குகின்றது.
ReplyDeleteMy humble advise to your site is to avoid this man who does not seem to be any sort of benefits to the community or the country as as whole. By way of publishing his so called news would definitely damage in the long run prestige and good image of your website.
ReplyDeleteivanda karuththukkalai pottu ivanai periya aalakkatheerhal
ReplyDeleteகல்முனை மக்கள் அழுது கொண்டு இருப்பதால் ஹக்கீமிடம் எந்த மாற்றமும் வரப்போவதில்லை .கட்சியின் தலைமைக்கு மீண்டும் ஒரு கல்முனையை சேர்ந்த ஒருவரை தலைவராக கொண்டு வருவதில் தான் ஏதாவது மாற்றங்களை காண முடியும் .
ReplyDeleteபிரதேசவாதம் ? உங்களைப்போன்ற முட்டாள்தனமான கொள்கைகள் இருந்தால் முஸ்லிம்களுக்கு ஆப்பு தான்.
Deleteநியாயமான , மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அரசியல்வாதிகளே நமக்கு தேவை அவன் எந்தப்பிரதேசத்தை சாரந்தவனாக இருந்தால் என்ன.