Header Ads



வாசனை திரவியத்தை பயன்படுத்தும் பெண்களுக்கு, மார்பக புற்றுநோய்..!


வாசனை திரவியத்தை அடிக்கடி பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜெனிவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த Andre-Pascal Sappino என்ற பேராசிரியர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தான் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவலில், 

பெண்கள் அடிக்கடி பயன்படுத்தும் வாசனை திரவியத்தில் அலுமினிய உப்புக்கள் சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

அதேசமயம், இந்த அலுமினிய உப்புக்கள் கலக்காத வாசனை திரவியமும் ஆரோக்கியமானது என உறுதியாக கூற முடியாது.

இதுபோன்ற அலுமினிய உப்புக்களை எலிகளின் மீது பரிசோதனை செய்தபோது, அவற்றின் உடலில் புற்றுநோய் கட்டிகளை உண்டாக்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இது சந்தேகத்திற்குரியது தான். மனிதர்கள் மீது இது புற்றுநோய் கட்டிகளை உண்டாக்குமா என்பதை 100 சதவிகிதம் இதுவரை உறுதிப்படத்தவில்லை.

ஆனால், அனைத்து பெண்களும் இதுபோன்ற வாசனை திரவியத்தை புறக்கணிப்பது சிறந்தது. மார்பக புற்றுநோய் ஆண்களுக்கு மிக அரிதாகவே ஏற்படும் என்பதால், அவர்களும் இதுபோன்ற திரவியங்கள் பயன்படுத்துவதை நிறுத்துவது நல்லது என பேராசிரியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.