இலங்கையிலுள்ள சகல தமிழர்களும், இந்தியாவிற்குசெல்ல தயாராக வேண்டும் - ஞானசாரா எச்சரிக்கை
தமிழீழமும் இனவாதமும் தோற்கடிக்கப்பட்ட நிலையில் விக்கினேஸ்வரன் இன்று இரண்டாவது பிரபாகரனாக விஸ்வரூபம் எடுத்துள்ளார். சிங்களவர்களின் இறுதிக்கட்ட பொறுமையையும் சோதித்து பார்க்கும் விக்கினேஸ்வரனுக்கு நாம் கூறுவது என்னவெனில், இனியும் எம்மை சீண்டிப்பார்த்தால் இலங்கையில் உள்ள அனைத்து தமிழர்களும் இந்தியாவிற்கு செல்ல தயாராக வேண்டும் என்பதேயாகும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
வடக்கில் தலைதூக்கிவரும் ஈழ வாதத்தை தோற்கடிக்க அனைத்து பெளத்த சிங்கள அமைப்புகளும் பெளத்த மதத் தலைவர்களும் கட்சி பேதம் இன்றி ஒன்றிணைய வேண்டும். பொது அணியொன்றை உருவாக்கி சிங்கள பெளத்த கொள்கையை நிலைநாட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுபல சேனா அமைப்பினால் நேற்று கிருலப்பனையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நல்லாட்சியை பலப்படுத்துவதாக ஆட்சியமைத்த புதிய அரசாங்கம் நாளுக்கு நாள் முன்னெடுத்து செல்லும் நடவடிக்களின் மூலமாக நாட்டின் சிங்கள இனமும் சிங்கள கலாசாரமும் அழிந்துகொண்டு செல்கின்றது. நாட்டில் முப்பது வருடகால யுத்தத்தை கடந்து அவற்றை மறந்து வாழ்ந்த இந்த நாட்டு மக்களுக்கு மீண்டும் அந்த நிலைமைகளை நினைவுபடுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட, தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மீண்டும் இன்று நாட்டுக்குள் செயற்பட்டு வருகின்றன. புலிகளின் பிரதிநிதிகள் மீண்டும் இந்த நாட்டுக்குள் அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்புடன் செயற்பட ஆரம்பித்துள்ளனர். அதன் ஒரு கட்டமாகவே தற்போது விக்கினேஸ்வரன் வடக்கில் தெரிவித்துவரும் கருத்துக்களும் அமைந்துள்ளன. புதிய ஈழ வாதமும், கைவிடப்பட்ட இனவாதமும் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. வடக்கில் சிங்கள மக்களும் சிங்கள புனிதத்துவமும் அழிக்கப்பட்டு வருகின்றது.
தெற்கில் சிங்கள மக்களுடன் வாழ்ந்து நீதியரசராக செயற்பட்ட விக்கினேஸ்வரன் இன்று வடக்கில் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் சிங்கள மக்களுக்கு எதிராக அவர் செயற்படுவது நினைத்துக்கூட பார்க்க இயலாத அளவிற்கு அமைந்துள்ளது. விக்கினேஸ்வரன் இன்று இரண்டாவது பிரபாகரனாக செயற்பட்டு வருகின்றார்.
நாட்டின் நீதியை நிலைநாட்டுவதாகவும், அனைத்து மக்களுக்கும் சமமாக செயற்படுவதாக கூறிய அரசாங்கமும் சிவில் அமைப்புகளும் இப்போது அமைதிகாத்து வருகின்றமையே எமக்கு கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகம் பற்றி பேசியவர்கள் ஏன் இன்று அமைதிகாத்து வருகின்றனர். வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு நியாயம் நிலைநாட்டப்படாதது ஏன் என்பதே எமது கேள்வியாகும். தெற்கில் தமிழர்கள் தடைகள் இன்றி வாழக்கூடிய சூழல் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுவரும் நிலையில், வானத்தை தொடும் அளவில் கோவில்களை அமைக்க சிங்களவர்கள் இடமளித்து வரும் நிலையில் வடக்கில் ஏன் சிங்கள மக்களும் தடைகள் விதிக்கப்படுகின்றது.
சிங்களவர்களின் இறுதிக்ககட்ட பொறுமையையும் சோதித்து பார்க்கும் விக்கினேஸ்வரனுக்கு நாம் கூறுவது என்னவெனில் இனியும் எம்மை சீண்டிப் பார்த்தால் இலங்கையில் உள்ள அனைத்து தமிழர்களும் இந்தியாவிற்கு செல்ல தயாராக இருக்கிறார்களா? என்பதற்கு விக்கினேஸ்வரன் பதில் கூறவேண்டும்.
அதிகாரத்துக்காக அரசாங்கம் வாய்மூடி இருக்கலாம் ஆனால் நாட்டுக்காகவும் சிங்கள பெளத்த மக்களுக்காகவும் நாம் பொறுமையாக இருக்க மாட்டோம். நாம் இவ்வளவு காலமும் அமைதியாக நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் இனியும் பொறுமைகாக்க முடியாது. நாட்டுக்கும் சிங்கள மக்களுக்கும் எதிராக தந்திரமாக புலிகள் அமைப்புகளும் மேற்கத்தேய நாடுகளும் செயற்பட்டு வருகின்றன. நாட்டின் புலனாய்வு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தேசிய பாதுகாப்பு பலவீனமடைந்து உள்ளது. ஆகவே நாட்டின் சிங்கள பெளத்த மக்கள் நாட்டுக்காக போராட முன்வரவேண்டும். அன்று லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சி இன்று இலங்கையிலும் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அனைத்து பெளத்த சிங்கள அமைப்புகளும் பெளத்த மதத் தலைவர்களும் கட்சி பேதம் இன்று ஒன்றிணைய வேண்டும். பொது அணியொன்றை உருவாக்கி சிங்கள பெளத்த கொள்கையை நிலைநாட்ட வேண்டும். மஹிந்த ராஜபக் ஷ போன்ற பலமான ஆட்சியை வீழ்த்த முடிந்த மக்களால் இந்த ஆட்சியை கவிழ்ப்பது கடினமான ஒன்றல்ல. ரணில், மங்கள, சந்திரிக்கா போன்ற தமிழ் இனவாதத்தை வளர்க்கும் நபர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும். சிங்களவர்களின் ஒற்றுமை என்னவென்பதை வெளிப்படுத்த வேண்டுமாயின் அதையும் வெளிப்படுத்த நாம் தயாராக உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Very good speach. Saniyen anga tholayattum
ReplyDeleteCall Anthony Rai n his friend to get ready.
ReplyDeleteKumar,ajan சொல்லுங்கள் பதில் .இப்ப யார் எதிர்ப்பு.
ReplyDelete@mustafa, நீங்களும் இந்த பிக்கு சார் மாதிரி நல்லா காமெடி பண்ணுறீங்கள்.
Deleteஇவனோடு சேர்ந்து ஜால்ரா போடும் தமிழ் ஹிந்து அடிப்படைவாத அமைப்புக்களுக்கு சமர்ப்பணம்.
ReplyDeleteநீயும் தான் இந்தியாவில் இருந்து வந்தாய் அப்படி பார்க்கப்போனால் விஜயனும் அவனின் குழுவும்.இவனுக்கு ஒரு வரலாறும் தெரியாது போல எருமே மாடு போல கத்துறான்.
ReplyDeleteGNANASARA; Evan oru madayan.ivanda wappa yar endru terindal ewanum tamil naattukku poha wendrum.un thai kitta keettu paru.sila samayam sollalam.
ReplyDeleteஇவர் சொல்வதெல்லாம் சரி என்று முஸ்லீம்கள் ஒப்பு கொள்கின்றனர்.
ReplyDeleteமுமம்மன்ன மைதானத்தை சிங்களவரிடம் ஒப்டையுங்கள்.ஹி...ஹி,..
இவனுக்கெல்லாம் பயப்பிட்டு இருந்தா தமிழர் போராட்டம் என்றொ முடிந்திருக்கும்,
It was already finished in 2009.
DeleteIs it? He he
Delete@Mustafa Jawfer:நீண்ட உறக்கத்தில் இருந்து எழுந்தது போன்று பேசுகிறீர்கள் . இந்த மொட்டை தலை கும்பல் சமீப காலத்தில் தான் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டது . விகாரமாதேவி பூங்காவில் சமாதான யாத்திரையை குழப்புவதற்கு முன்பு இருந்து தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டு வந்துள்ளது . இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை . தவிர தமிழர்களை வெளியேற சொல்ல இவர்கள் யார்? மீண்டும் இனக்கலவரம் ஒன்று ஏற்பட்டால் சிங்களவர்களுக்கு தான் அது கடைசி காலம்.
ReplyDeleteஉங்களுக்கு மீண்டும் ஒரு அரிய சந்தர்ப்பம் BBS உடனான உறவை புதுப்பித்துக்கொள்வதற்கு.
Mr. Kumar நான் தூங்கவில்லை விளித்துக்கொண்டுதான் இருக்கிறேன் ,இந்த கொஞ்ச நாளாக முஸ்லிம்கள் வடகிழக்கை இணைக்க விரும்பவில்லை அவர்கள் நாட்டையும் புதிய அரசியல் யாப்பையும் குழப்பி வாருகிறார்கள் என்று பல கண்டனங்களை முன் வைத்து வந்தீர்கள்.திடிர் என்று ஞானசேர வந்து புகுந்து விட்டார் அதைத்தான் சொன்னேன்.ஆனால் இவனுக்கு யாரையும் வெளிய போ உள்ளே வா என்று சொல்லும் உரிமை கிடையாது அப்படி எந்த நாடும் நம்மை பாரமடுக்காது,இவனின் உழரல் விடிந்தால் சரி இரவு மாட்டு இறைச்சி பொரியலும் சாராயமும் சாப்பிட்டு இருப்பான் அதன் வெறி முடியாமல் உழறுவான்
Deleteஞானசார தேரரே மக்களுக்கு சிலவிடயங்களை சொல்லுமுன் அவ்விடயங்களை நன்றாக ஆராய்ந்து விட்டு சொல்லவும் உங்களின் பாசிஷ மங்காத மடை சிந்தனைபடி கவனித்தால் இலங்கை பூமி மனிதர்கள் அற்ற இடமாக மாறிவிடும் இந்து தமிழர்கள் இந்தியாக்கு செல்லவும்,முஸ்லிம்கள் சவுதிக்கு செல்லவும்,கிறிஸ்தவர்கள் பலஸ்தீனதிட்கு செல்லவும் என்றால் நீங்கள் கட்டாயம் மதசார்பாக நேப்பலதிட்கும் மொழிசார்பாக வடிந்தியாவிட்கும் சென்றுவிடவேண்டும் கட்டாயம் இதை விளங்கிகொள்ளவும்.
ReplyDeleteஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட ம்
ReplyDeleteஞானசாரா! நாம் அனைவரும் இலங்கை பாரில் பிரந்தவர்கள்தாம் நம் சிந்தனைகளில்தான் வித்தியாசங்கள் உண்டு அதற்கினங்க நீங்கள் பத்தர் போதனை நல்லம் என்று விசுவீசித்துட்டு அதைபின்பற்றாமல் நயவஞ்ஞகனாய் வாழ்கின்றீர் அது போன்று சிலர்,இந்து மதத்தையும் சிலர் அவர்களின் சிந்தனைக்கு ஏற்ப மதங்களையும் பின்பற்றி கொண்டிருக்கின்றார்கள் உதாரனம் பிரதமர் ரனில் ஐக்கிய தேசிய கட்சி ராஜபக்ஷ சுகந்திர கட்சி அனுரகுமார மக்கள் கட்சி ஆகவே இதில் யார் அடிப்படை இலங்கையர் யார் ஏன் பலகட்சியாக பிரிந்தார்கள் உங்கள் அனைவரும் இலங்கையர்களா இல்லையா? என்ன பதில்?
ReplyDeleteவெளிச்சத்தில் மஞ்சல் பிடைவையுடனும் இருளில் மது,மங்கையுடனும்,வாழ்ந்தால் இவ்வாறுதான் புத்தி பேதலித்து திறியவேண்டும்
ReplyDeleteBUDDHAGAMA INDIAVIL IRUNDU WANDADU.APPO ATAYUM ANUPPI WIDA WARUM ALLAWA? Mr GNANASARA ORU MENTLE CASE.
ReplyDelete