தாஜூதீன் கொலை - 'என்னை கைது செய்யக்கூடாது' என்ற மனு நிராகரிப்பு
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில், மேற்கொள்ளப்பட்ட முதலாவது பிரேத பரிசோதனையை நடாத்திய முன்னாள் பிரதான நீதிமன்ற வைத்திய அதிகாரியான ஆனந்த சமரசேகரவின் முன் ஜாமீன் (முன் பிணை) மனு இன்று (15) தள்ளுபடி செய்யப்பட்டது.
கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் இம்மனு விசாரணைக்கா எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் அம்மனுவை தள்ளுபடி செய்தார்.
குறித்த விடயம் தொடர்பில், தன்னை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால், அது தொடர்பில் தனக்கு முற்கூட்டிய பிணையை வழங்குமாறு அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த மனு தொடர்பில், சட்ட மாஅதிபர் திணைக்களம், தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதோடு, குறித்த நபர், பிணையை பெறுவதன் மூலம் சாட்சியாளர்களுக்கு அது அச்சுறுத்தலாக அமையலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment