முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு, புதிய சாரதி அனுமதிப்பத்திரம் - அரசாங்கம் தீர்மானம்
நாடெங்கிலும் உள்ள ஒரு மில்லியன் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளில் உள்ள போக்குவரத்து அமைச்சுக்கள் மூலம் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
குருநாகலில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் அதனை கூறியுள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதிகள் தொடர்பில் புதிய ஒழுங்குமுறை திட்டங்களை அறிமுகப்படுத்தவே இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 6.3 மில்லியன் வாகனங்களில் 3.3 மில்லியன் மோட்டார் வாகனங்களும்,1.05 மில்லியன் முச்சக்கர வண்டிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டிகளால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நோக்குடனும் இந்த வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment