சிரியாவில் போர்நிறுத்தம் முறிந்தது, - ஐ.நா. வாகனங்கள் மீது தாக்குதல் - கோழைகள் என பான் கண்டனம்
சிரியாவில் ஐநா உதவி வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கோழைகள் என்று ஐநாவின் தலைமைச்செயலர் பான் கீ மூன் சாடியிருக்கிறார்.
அதற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலில் பன்னிரெண்டு உதவிப்பணியாளர்கள் கொல்லப்பட்டனர். பதினெட்டு வாகனங்கள் அழிக்கப்பட்டன.
போர்நிறுத்தம் ஏறக்குறைய குலைந்துவிட்டது. ஐநா தன் உதவிகள் அனைத்தையும் நிறுத்தியுள்ளது. ஆனால் இந்த தாக்குதலை தாம் நடத்தவில்லை என்று சிரிய இராணுவம் மறுத்துள்ளது.
Post a Comment