Header Ads



முஸ்லிம் பாடசாலைகள் வெறிச்சோடின..!

-விடிவெள்ளி-

ஹஜ்ஜுப் பெரு­நா­ளுக்கு மறு­தி­ன­மான நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளி­லு­முள்ள முஸ்லிம் பாட­சா­லை­களுக்கு மாண­வர்கள் பெரு­ம­ளவு சமு­க­ம­ளிக்­க­வில்லை என அதி­பர்கள் தெரி­வித்­தனர்.

அதே­போன்று பெருந்­தொ­கை­யான ஆசி­ரி­யர்­களும் நேற்­றைய தினம் பாட­சா­லை­க­ளுக்கு சமூ­க­ளிக்­கா­த­தனால் கற்றல் கற்­பித்தல் நட­வ­டிக்­கைகள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சில பாட­சா­லை­களில் பத்­துக்கும் குறை­வான மாண­வர்­களே சமு­க­ம­ளித்­த­தா­கவும் அதி­பர்கள் தெரி­வித்­தனர்.

இதன் கார­ண­மாக சில பாடசாலைகள் உரிய நேரத்திற்கு முன்னராகவே கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹஜ் பெருநாள் திங்கட் கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் அன்று மாத்திரமே அரசாங்க விடுமுறை தினமாகும்.

இதன் காரணமாக நேற்று முதல் வழமைபோன்று பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின. எனினும் எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் பௌர்ணமி விடுமுறை தினம் என்பதால் இந்த வாரம் கல்வி நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் சமுகமளிப்பதில் ஆர்வமின்றிக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

No comments

Powered by Blogger.