பிராமண குடும்பத்தில் பிறந்த நீங்கள் எப்படி இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் ஆதரிக்கிறீர்கள்..?
சுப்பிரமணி சாமி ஏன் இஸ்லாத்தை எதிர்க்கின்றார்...? தன் வீட்டில் இஸ்லாம் வளர்கின்றதை கண்டு விரக்தியில் எதிர்க்கின்றாரா?
கொடூங்கோலன் ஃபிர்ரவுன் வீட்டில் முஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வளர செய்ததை போல சுப்பிரமணி சாமியின் மகள் சுகாசினி சொல்வதைக் கேளுங்கள்...
பாரம்பரிய பிராமண குடும்பத்தில் பிறந்த நீங்கள் எப்படி இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் ஆதரிக்கிறீர்கள் என நெறியாளர் கேட்டதற்கு அவர் கொடுத்த பதில்கள் யாரை கலங்கடிக்கிறதோ இல்லையோ சுப்பிரமணிய சுவாமியையும், இந்துத்துவா வாதிகளையும் உலுக்கி இருக்கும்.
என் தந்தை உட்பட வீட்டில் உள்ளவர்களுக்கு பூஜை புணஸ்காரங்களில் அதிகம் ஈடுபாடு உண்டு இருந்தாலும் எனக்கு இஸ்லாத்தின் மீது அதிகம் ஈர்ப்பு ஏற்பட்டதற்கு அல்லாஹ்வே காரணம். (தான் நாடியவரை நேர்வழி செலுத்துவேன் தான் நாடியவரை வழிதவற செய்வேன் என்பது போல- அல்குர்ஆன்)
நான் ஒரு ஹதிஸ் டி.வி களில் கேட்டேன் உருவத்தாலோ, உயர் குலத்தாலோ, யாரும் உயர்ந்தவர் இல்லை யாருடைய உள்ளம் விசாலமாகி இருக்கின்றதோ அவரே உயர்ந்தவர் என்ற ஹதிஸை என்னுடன் ஒப்பிட்டு பார்த்தேன்.
எனக்கு உருது மொழி மீது அதிகம் ஈடுபாடு உண்டு. அந்த அடிப்படையில் நான் அடிக்கடி முஷராக்களுக்கு (கவிதை அரங்கம்) செல்வேன் அங்கு பல முஸ்லீம்கள் வருவார்கள் அவர்களிடம் பழகும் போது அன்பு, பாசம், கணிவு, கலந்த பேச்சுகள் என்னை கவர்ந்தது இவர்களையா தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், இவர்களுடன் பேச கூடாது, பழக கூடாது என நம்மை தடுக்கின்றார்கள் என கவலை என்னை ஆட்கொண்டது.
குர்-ஆன் வசனத்தை கவிதையாக முஷராக்களில் பாடினார் ஒரு பெண் (குதா) யாரை காப்பாற்ற நினைத்தாலும் சிலந்தி வலையை கேடயமாக கொண்டு காப்பாற்றுவான், யாரை உயர்த்த நினைக்கின்றானோ அவரை கடலையே பிளந்து வழி கொடுப்பான், யாருடைய உயிரை எடுக்க நினைக்கின்றானோ கொசுவை கொண்டே உயிரை பரிப்பான்.
இஸ்லாத்தின் மீது தவறான கருத்துகள் திணிக்கப்படுகிறது, உலகம் முழுவதும் தவறான நம்பிக்கையை விதைத்து இருக்கிறார்கள். நான் அதை மாற்ற துடிக்கிறேன், உலகம் முழுவதும் மாற்ற முடியாது என்றாலும் என் வீதியில் இருந்து, என் சுற்றுப்புறத்திலிருந்து மாற்ற போராடுகிறேன்.
ஆரம்பத்தில் இஸ்லாமியர்களுடன் பழக வேண்டாம் என பல உறவினர்களும், தோழிகளும் கூறினார்கள், அவர்கள் கெட்டவர்கள், தீவிரவாதிகள் என கூறி பயந்தார்கள், அவர்கள் பயத்தை மாற்றினேன். தற்போது அவர்களே இஸ்லாத்தை விரும்பி படிக்கிறார்கள், புத்தகங்களை கேட்கிறார்கள், ஆலோசனை கேட்கிறார்கள். அவர்களுக்கும் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை பிறந்தது.
இஸ்லாம் மிக அமைதியான மார்க்கம், அன்பான மார்க்கம், அழகான மார்க்கம், தூய்மையான மார்க்கம் இதை படிக்க ஆரம்பித்தால் அதை படிப்பவர்கள் அதில் ஒன்றிப்போய், இஸ்லாம் இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்றார் சுஹாசினி.
- கேப்டன் சேக்காதி
பின்னணியை மறைத்துவிட்டு, சுகாசினி இஸ்லாத்தை சுயமாக புகழ்வது போன்றும், நாளை இஸ்லாத்தை ஏற்றுவிடுவார் போன்றும் காட்ட முடிவது அபத்தம் ஆகும்.
ReplyDeleteசுப்ரமணியன் சுவாமியின் மகள் இந்த சுகாசினி. இவர் தீர்மானம் செய்திருப்பது நதீம் ஹைதர் என்பவரை. நதீம் ஹைதர் இந்திய முன்னாள் வெளியுறவு செயலர் சல்மான் ஹைதரினதும், அவரது மனைவியான மேடை நாடக நடிகை குசும் இனதும் புத்திரன் ஆவார்.
அது ஒரு கலப்புக் குடும்பம், கலப்புக் குடும்பங்களில் மத வெறி இருக்காது. சுகாசினி புர்கா போடும் முஸ்லிமாக மாறுவார் என்று எதிர்பார்த்தால், அது உங்களுக்கு பலத்த ஏமாற்றத்தையே தரும்.
அவரிடம் கிறிஸ்தவம் குறித்து கேள்வி கேட்டாலும், இதே போன்று நல்லவிதமான கருத்துக்களையே தருவாரே தவிர, முஸ்லிம்கள் எதிர்பார்ப்பது போன்று கிறிஸ்தவத்தில் சிலை வணக்கம் இருக்கின்றது, பைபில் மனித கரங்களால் மாற்றப்பட்டு விட்டது என்றெல்லாம் சொல்ல மாட்டார்.
மதத்தை மார்க்கட்டிங் செய்ய சுகாசினியின் மனிதாபிமானமும், மதச் சார்பற்ற பரந்த சிந்தனையும் பலிக்கடா ஆக்கப் படுகின்றன என்பதுதான் உண்மை.
யார் என்ன சொன்னாலும் ஒருவரை நேர்வழியில் நிலைத்திருக்கச் செய்பவன் இறைவனே.
Deleteஎதற்கும் நீங்ங்களும் இஸ்லாத்தை சற்று படித்து ஆய்வு செய்து பாருங்கோண்ணா உண்மை புரியும்.
Deletev don't expect that all non muslims should convert to Islam. but v expect that all people including muslims also should think unbiased.
Deleteதிருத்தம் : "இஸ்லாத்தை ஏற்று விடுவார் போன்றும் காட்ட முடிவது" என்பதை "இஸ்லாத்தை ஏற்று விடுவார் போன்றும் காட்ட முயல்வது" என்றும்,
ReplyDelete"சுகாசினி தீர்மானம் செய்து இருப்பது" என்பதை "சுகாசினி திருமணம் செய்து இருப்பது" என்றும் வாசியுங்கள்.
தட்டச்சுத் தவறுக்கு வருந்துகின்றேன்.
இறைவன்,ஒரு மனிதனை நேர்வழியில் செலுத்த நாடினால் அதை எவராலும் தடுத்திட முடியாது.
ReplyDeleteநாம் இங்கு மார்க்கெடிங் செய்வது மதத்தை அல்ல மார்கத்தை. கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்ரு. பயன் பெரப் போவது அல்லாஹ்வோ இஸ்லாமோ அல்ல, அதைப் பெருபவர்.
ReplyDeleteMr.hari ungal mathathathil urine ponal sutham seiya solirukka.ennathu mark Kathl, (Mathathilla) kurai solra ungallukku enthathahithium illai.
ReplyDeleteUnakanil parththal yavum kuttranthan
ReplyDeleteசகோதரர் ஹரி நீங்கள் அவசரப்பட வேண்டாம்,அந்த சகோதரி என்ன சொல்கிறார் என்று அமைதியாக ஆறுதலாக சிந்தித்து பாருங்கள்,இஸ்லாம் என்பது என்ன என்று ஆராய்ந்து பாருங்கள் அப்போது புரியும் எ்டுத்த எடுப்பில் எதுவும் பேசாதீர்கள் உண்மை விளங்கினால் கட்டாயமாக புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வீர்கள் சந்தேகமில்லை அதனால் உங்களுக்கே நன்மை இஸ்லாத்துக்கு எந்த நன்மையும் இல்லை நீங்கள் உயர்ந்த சொர்க்கம் சென்று விடுவீர்கள் பயங்கர நரகத்தை வி்ட்டும் தப்பி வி்டுவீர்கள் அமைதியாய் சிந்தியுங்கள் நன்றி
ReplyDeleteஇஸ்லாமை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம்.. ஆனால் கடவுள் இஸ்லாத்தில் உள்ளோர்க்கு சொர்க்கத்தையும் ஏற்காதவருக்கு நரகத்தையும் அளிப்பார் என்ற கருத்தில் உடன்பாடு அல்ல...
Deleteதன் சக மதத்தினரை கொன்று குவிக்கும் ISIS க்கு உங்கள் அல்லாஹ் சொர்க்கத்தை அருள்வாரா ?
அவர் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக..
மனித குல நன்மைக்காக உயிர் விட்ட காந்தி , நெல்சன் மண்டேலா, சே குவரா ஆகியோர்க்கு அவர் நரகத்தை அருள்வாரா ?
அவர்கள் முஸ்லீம் அல்ல என்ற காரணத்திற்காக
இவ்வுலகில் தன் சக மனிதர்க்கு, ஊருக்கு , நாட்டுக்கு, உலகத்திற்கு எவன் நன்மை செய்வானோ.. அவன் கடவுளால் நேசிக்கப்படுவான்.. ஏனெனில் அவன் செய்யும் தொண்டு ஆனது கடவுளுக்கு செய்யும் உண்மையான வழிபாடு..
அதற்கு முன்பு எந்த உருவ, அருவ வழிபாடும் பயன் தர போவதில்லை
இந்த பதிவு சொல்ல வரும் கருத்து என்ன என்பது தான் முக்கியமான ஒன்று.
ReplyDeleteஅவரின் கருத்தை தான் பதிவு செய்து உள்ளது.
Some people knows everything about Islam but they just pretending..
ReplyDeleteஇஸ்லாமிய நண்பர்களே,
ReplyDeleteHari கேள்வி கேட்டதும், இஸ்லாத்தை படியுங்கள் என்று சொல்கின்றீர்கள். இஸ்லாத்தை ஓரளவு படித்த நான், இஸ்லாத்தில் இருந்து, இஸ்லாமிய அடிப்படைகளை முன்வைத்து கேள்வி கேட்டால் என்னை தூற்றுகின்றீர்கள். குறிப்பாக Gee, Voice, jawfer போன்ற பெயர்களில் இருப்பவர்கள் என்னோடு வம்புக்குத்தான் வருகின்றார்கள். எனது கேள்விகளுக்கு நியாயமாக பதிலே சொல்வதில். அத்துடன் எனது கொமண்ட்ஸ் அனுமதிக்கவே கூடாது என்று அழுத்தம் கூட கொடுக்கப் படுகின்றது. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?
நிலவனின் அங்கலாய்ப்பு புரிகிறது, இஸ்லாத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று கேள்விகள்எ கேட்பது ன்பது வேறு, வெறும் விவாதத்திற்காக கேள்வி கேட்பதென்பது வேறு. அதிலும் நிலவனின் கேள்விக்கு சரியான பதில் பல சந்தர்ப்பத்தில் கொடுக்கப்பட்டபோதும் அதனை ஏற்றுக்கொண்டதில்லை என்பது ஒருபுறமிருக்க, அதனை அப்படியே விட்டு விட்டு ஆர் எஸ் எஸ் சில் இருக்கும் ராஜா போன்று அடுத்த ஒரு விஷயத்தை புதிதாக ஆரம்பிப்பார்- . விவாதம் என்று வந்து விட்டால் எதிர் தரப்பு தருகின்ற மிகச் சரியான நிறுவுதல்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்கும் ஒருவருடன் தான் விவாதிக்க வேண்டும், வீண் பொழுதுபோக்குக்காக விவாதிப்பதாயின் அது அவரது தனிப்பட்ட ஈ மெயில் மூலமாக நடக்கட்டும். நிலவன் இஸ்லாத்திற்கு வந்தால் அவருக்குத்தான் அது பெருமையே தவிர அவரால் இஸ்லாத்திற்கு ஒன்றும் பெருமையில்லை.
ReplyDeleteஜப்னா முஸ்லிமுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு அது ஒன்றும் எமது சொத்து அல்ல. நிலவன் அவரது கேள்விகளுக்கு நியாயமான பதில் சொல்லாத சந்தர்ப்பங்களை முடிந்தால் பட்டியலிடட்டும். அனால் தெளிவான பதில் கொடுத்த பின்னும் அவர் அதனை ஏற்றுக் கொள்ளாத சந்தர்ப்பங்களை நாம் கூறுகிறோம்
இதை விட சிறப்பாக யாரும் அவரைப்பற்றி சொல்லியீருக்கமுடியாது... அவரைக்கண்டால் நாங்கள் பயந்து ஒடுகிறோமாம். நான் O/L படிக்கும்
Deleteகாலத்தில் ஒருமுறை சுபஹ் தொழுகைக்கு போகும் போது ஒரு பைத்திய நாயை்கண்டு பய்ந்து ஓடினேன், அதுதான் எனக்கு நினைவில் நான் பயந்து ஓடிய சந்தர்ப்பம். இவர் ஒன்றும் அப்படி இல்லையே நாம் பயந்து ஓட...
Teenagers have these sort of mentality where they think they are untouchables so they do what they wanna do. If people didn't oppose they thing the people are scared of them.
நிலவன் நீங்கள் கேள்வி கேட்கும் போது இஸ்லாமிய மூல நூலகளான குரான் மற்றும் சரியான ஹதீஸ்களை ஆதாரமாக காட்டி கேட்கவேண்டும். இஸ்லாத்தின் பெயரால் சொல்லப்பட்டவை இஸ்லாமாகாது. அதனால்தான் படிங்க படிங்க என்று சொல்கிறார்கள். குரானும் சொல்கிறது :
ReplyDeleteஅத்தியாயம் : 96
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .
1. (முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் படிப்பீராக.
2. அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து படைத்தான்.
3. ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன்.
4. அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான்.
5. அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.
கிரிஸ்தவத்தைப் பற்றிக் கேட்டாலும் அதன் சிறப்பைச் சொல்வார் என்று ஹரி சொல்லுவது போன்று சாதாரணமாக கருத்துச் சொல்லும் நிலையிலிருந்து இப்பெண் இஸ்லாம் தொடர்பாக சொல்லவில்லை.மாறாக பெற்றோர் செய்யும் புஜை புணஸ்காரணங்களை விட தன்னை இஸ்லாம் கவர்ந்ததாகவும் மட்டுமல்ல இஸ்லாம் அமைதியானது எனவும் அது தவறாக சித்தரிக்கப் படுவதாகவும் அதனை மாற்ற தான் துடிப்பதாகவும், குறைந்த பட்சம் தன் சுற்றுப் புறத்திலேனும் அந்நிலையை மாற்ற முயற்கிப்பதாகவும் கூறுகிறார். ஆனால் ஹரி போன்றவர்கள் அவர் கருத்தை சாதாரண கருத்து நிலை பொன்று திசை திருப்புகின்றார். நியாயமாக சிந்திக்கின்ற தமிழ் சகோதரர்களுக்கு புரியும் அவர் மனதை இஸ்லாம் கடுமையாக ஈர்த்திருக்கிறதென்று.
ReplyDeleteHarry has a right to ask any question or clarification about Islam. Islam is for all the mankind and the author of Quran is Allah.pls try to answer or clarify in a polite way without hurting others or their faith.
ReplyDeleteHealthFRee, எந்த வழிபாடும் பயன்தரப்போவதில்லை. இது உங்கள் கருத்து. நாத்திக கேள்வியாகக்கூட இருக்கலாம். எப்படி சுவர்க்கம், நரகம் என்று பேசுவீர்கள். நாத்திகம் அதையெல்லாம் நம்புவதில்லையே.
ReplyDeleteபிராமண குடும்பத்தில் பிறந்த நீங்கள் எப்படி இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் ஆதரிக்கிறீர்கள்..?
ReplyDeleteஉண்மையை,யாரும் மறுக்க முடியாது அதே வேலை பாசிசாநாய்களுக்கு தாங்க முடியாத அதான்,அரிக்குது நடுநிலை மனிதர்கள் தான் உண்மை ஒத்துக் கொள்வார்கள்
ReplyDeleteDr. அப்துல் வஹாப்
ReplyDeleteஉங்கள் பின்னூடடல் மோகவும் தாழ்ந்த மனப்போக்குடையதாக இருக்கிறது.
"நற்பண்புகளை பரப்பவும், பூரணப்படுத்தவும்தான் நான் நபியாக அனுப்பப்பட்டேன் என் நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டு எம்மையும் அந்த நற் பண்புகளூடாகவே எச்சந்தர்ப்பத்திலும் எவருடனும் நடந்துகொள்ளுமாறு கூறினார்கள்.
ஆகவே இஸ்லாம் நற்பண்புகளையே போதிக்கிறது தயவு செய்து நீங்கள் அதற்கு மாற்றமாக கருத்து தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ளுமாறு மிகவும் அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.