Header Ads



சோறு பொதி விற்ற துமிந்த சில்வா, மிகப்பெரிய செல்வந்தரானது எப்படி..? பேராசிரியரின் கேள்வி

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா பல வருடங்களுக்கு முன்னர் தனக்கு சோறு பொதிகளை விற்றுள்ளதாக பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன எழுதியுள்ள ஜன அரகலயக்க திய சலக்குன என்ற நூல் வெளியிட்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

துமிந்த சில்வா என்ற நபர் பாதுகாப்பாக இந்த சமூகத்தில் எப்படி செயற்பட்டார்? அவர்கள் எப்படி வர்த்தகத்தை செய்தனர்? அவர்களின் அதிகாரத்தை பரப்பியது எப்படி, துமிந்த சில்வா பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இசுருபாயவிற்கு அருகில் மூன்று பாலங்கள் சந்தி என்ற ஒரு இடம் இருக்கின்றது.

ஒரு காலத்தில் அங்கு லக்ஷ்மி புட் சென்டர் என்ற பெயரில் உணவு விற்பனை செய்யும் உணவகம் ஒன்று இருந்தது.

அந்த உணவகத்தில் துமிந்த சில்வா பற்றுச்சீட்டை எழுதி எனக்கு சாப்பாட்டை வழங்கியுள்ளார். எனக்கு அவர் உணவு விற்றுள்ளார்.

துமிந்த சில்வாவின் அன்றைய நிலைமையை எண்ணிப்பாருங்கள். இவர்களை போன்ற மிகப் பெரிய செல்வந்தர்கள் எப்படி உருவாக்கின்றனர்?.

இந்த செல்வந்தரை குற்றம் சார்ந்த அரசியல் சக்தி பாதுக்காக்கின்றது எனவும் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.