Header Ads



“நீ யார் எனக்கு, ஆலோசனை வழங்குவதற்கு”

அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடுமையாக திட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமல் வீரவன்ச, பசில் ராஜபக்சவை தொலைப்பேசியின் ஊடாக கடுமையாக திட்டியுள்ள நிலையில் இறுதியில் அது சூடான வாக்குவாதத்துடன் நிறைவடைந்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது புதிய கட்சி தொடர்பில் மக்கள் நம்பிக்கையை உடைத்து சமூகத்தின் முன் கேலி செய்ததாக வீரவன்ச சாடியுள்ளார்.

பசில் ராஜபக்ச என்பவர் திருடர் எனவும், பசிலினால் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு அரசியல் சக்தியும் போலியானதெனவும் அவை நீண்ட கால அரசியல் நடவடிக்கை அல்ல எனவும், விமல் வீரவன்ச இதற்கு முன்னர் பல முறை ஊடகங்களில் பகிரங்கமாக கூறியுள்ளார்.

எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் 08ஆம் திகதி ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் சக்தி பசில் ராஜபக்சவின் ஆணையின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படுகின்றன. இந்நிலையில் அதனை சுற்றி இணைந்திருந்த சிறிய கட்சி உறுப்பினர்கள் அதில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் மஹிந்த ராஜபக்சவுக்கு அறிவித்து, பசில் ராஜபக்சவை அரசியில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள போதிலும், கோத்தபாய முன்வருவதனை தடுக்கும் வகையில் பசில் செயற்படுகின்றமை மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கு அவசியமான பணம் பசில் ராஜபக்சவினால் வழங்கப்படுகின்றமையினால், மஹிந்த ராஜபக்சவினால் விமல் வீரவன்சவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் கடும் கோபமடைந்த விமல் வீரவன்ச, இவ்வாறு பசில் ராஜபக்சவுக்கு தொலைப்பேசி அழைப்பு மேற்கொண்டு கடுமையாக திட்டியுள்ளார்.

விமல் வீரவன்ச திட்டுவதனை சற்று நேரம் கேட்டுக் கொண்டிருந்த பசில் ராஜபக்ச “நீ யார் எனக்கு ஆலோசனை வழங்குவதற்கு” என கூறி தொலைப்பேசி அழைப்பை துண்டித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. இந்த நாட்டில் எவ்வளவு முசிப்பாத்தி இன்னும் பார்க்க வேண்டி இருக்கும் அல்லவோ.இருந்து தான் பார்ப்போமே

    ReplyDelete

Powered by Blogger.