Header Ads



"வன்முறையில் ஈடுபடுபவர் உண்மையான இஸ்லாமியராகவோ, பௌத்தராகவோ இருக்க முடியாது" - தலாய்லாமா


உலகை அச்சுறுத்தி வரும் தீவிரவாதிகளை மதத்தின் பெயரில் அழைப்பது சரியா என்ற கேள்விக்கு புத்தமத தலைவரன தலாய் லாமா உருக்கமாக பதிலளித்துள்ளார்.

தீவிரவாத தாக்குதல்களை கண்டிப்பது தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் தலாய் லாமா பங்கேற்றார்.

அப்போது, ‘வன்முறையில் ஈடுப்படும் எந்த நபரும் ஒரு உண்மையான இஸ்லாமியராகவோ அல்லது புத்தமதத்தை சேர்ந்தவராக இருக்க முடியாது.

ஏனெனில், ரத்தத்தை சிந்த வைக்கும் எந்த செயலில் ஈடுபடும் ஒரு நபர் இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றும் நபராக இருக்க மாட்டார் என்பதை தான் இஸ்லாமிய மதமும் போதிக்கிறது.

உலகில் உள்ள முக்கிய மதங்கள் அனைத்தும் ஒரே விடயத்தை மட்டுமே போதித்து வருகிறது.

பிறரிடம் அன்பு மற்றும் கருணை காட்டுவது, மன்னிப்பது, சகிப்புதன்மையை வளர்த்துக்கொள்வது, திருப்தி அடைவது, சுய ஒழுக்கத்தை காப்பது மற்றும் அனைத்து மத நம்பிக்கைகளை மதிப்பது என்பதை தான் எடுத்துரைக்கிறது.

எனவே, தீவிரவாத செயல்களில் ஈடுப்படுபவர்களை ஒரு மதத்தை குறிப்பிட்டு அழைப்பது சரியல்ல’ என தலாய் லாமா கருத்து தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.