Header Ads



ஜனாதிபதியின் இணையத்தை ஹெக் செய்த மாணவருக்கு உயர்பதவியுடன், புலமைப் பரிசில் வழங்குக - கூட்டு எதிர்க்கட்சி


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணைய தளத்தை ஹெக் செய்த பாடசாலை மாணவருக்கு உயர் பதவி வழங்கப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி கோரியுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணைய தளம் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஹெக் செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவரும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு ஜனாதிபதியின் இணைய தளத்தை ஹெக் செய்த பாடசாலை மாணவரை, ஜனாதிபதியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளராக நியமிக்க வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி கோரியுள்ளது.

உலகின் ஏனைய நாடுகளில் இவ்வாறான திறமைசாலிகளுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சைபர் தாக்குதல்களை தடுக்க இவ்வாறானவர்களின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மாணவருக்கு புலமைப் பரிசில் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாணவர் பயங்கரவாத குற்றச் செயல் ஒன்றில் ஈடுபடவில்லை எனவும் அவரை கடுமையான குற்றவாளியாகக் கருதப்படக் கூடாது எனவும் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

5 comments:

  1. ஹிஹிஹெஹிஹி

    ReplyDelete
  2. கோமாளிகள்நா ட்டின் முக்கியமான பிரச்சினை ஒன்றுக்கு இவர்கள் குரல் கொடுக்கின்றனர்

    ReplyDelete
  3. If its happen to former president what will happen

    ReplyDelete
    Replies
    1. Dear excellency president we have to think twice of boy who hacked your website he could be a future spy of opposition.

      Delete

Powered by Blogger.