Header Ads



யாழ்ப்பாணத்தில் மனித உருவில், பெண் பிசாசு, பொலிஸாரால் கைது (அதிர்ச்சி வீடியோ)

-Siva Karan-

நேற்று காலை நேரம் 6.30 அன்மித்தது நான் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தேன்.அயலில் உள்ள தோட்டக்கிணற்றடியில் பெண் ஒருவர் மிக ஆக்கிரோசமாக யாரையோ திட்டித்தீர்க்கும் சத்தமும், சிறுமியின் அழுகுரலும் கேட்டது. அயல் வீட்டில் குடியிருக்கும் பெண் தனது பிள்ளையை அடிக்கடி இவ்வறு திட்டுவதை அவதானித்திருக்கிறேன். ஆகையால் இது வழமையான ஒன்று என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு குளித்துக்கொண்டிருந்தேன். ஆனாலும் பெண்ணின் அதட்டும் பத்தமும் அதனைத்தொடர்ந்து பலமாக தாக்கும் சத்தமும் சிறுமியின் அலறல் சத்தமும் குளியலறையிலிருந்த என்னை வெளியே இழுத்து வந்தது. வெளியில் வந்த நான் சத்தம் கேட்கும் திசையை அவதாணித்தேன்.

தடி ஒன்றினால் ஆறு வயது முதிக்கத்தக்க அந்த சிறுமியை அவளது தாய் பலமாக தாக்குவதைப்பார்த்து என்ன செய்வது என ஒரு கணம் திகைத்து விட்டேன். ஓடிச் சென்று அந்தப் பெண்ணிடம் இருந்த தடியை பறித்தெடுக்க எண்ணினாலும் அந்தப் பெண் பற்றியும் அவரது கணவர் பற்றியும் ஏற்கனவே நான் அறிந்த சம்பவங்கள் என்னை தடுத்து நின்றன. இருந்தும் சிறுமி தொடர்ந்தும் தாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் ஒரு முடிவெடுத்தேன். இந்த சிறுமி தாக்கப்படும் கடைசி நாள் இன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதிக்கொண்டு எனது ஒளிப்படக்கருவியின் ஊடாக நடப்பவை அனைத்தையும் ஒளிப்பதிவு செய்தேன். அவ்வாறு ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்தக் கானொளியை தயவு செய்து எல்லோரும் பார்க்கவேண்டும் என்பதற்காகவும் அந்த ராட்சசியிடமிருந்து அந்த சிறுமியை காப்பாற்றுமாறும் எல்லோரையும் வேண்டுகிறேன்.

இந்த ஒளிப்பதிவைமேற்கொண்டதன் பின்னர் இந்தப் பெண்பற்றி அயலில் விசாரணை செய்த போது சிறுமியை தாக்கிய குறித்த பெண் சிறுமியின் தந்தையை இரண்டாம் தாரமாக திருமணம் செய்திருப்பதாகவும் சிறுமியின் தாய் இறந்து விட்டார் என்றும் சிறுமிக்கு இந்தப்பெண் சிறியதாய் என்றும் அறிய முடிந்தது.

இந்தக் கானொளியில் தயவு செய்து அவதாணியுங்கள் மிகக்கூர்மையான கத்தியால் சிறுமி பலமாகத் தாக்கப்படுகிறாள் எனவே குழந்தை நலக்காப்பகங்கள், சிறுவர் நன்நடத்தை அதிகாரிகள், சிறுவர்கள் மீது அன்பு செலுத்துவோர் தயவு செய்து இந்தப் பெண்ணிடமிருந்து சிறுமியை காப்பாற்றும் அதே நேரம் குறித்த பெண்ணை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டணை வழங்க ஏற்பாடுகளை செய்யுமாறும் வேண்டுகிறேன். மேலதிக தகவல்களை எதிர் பார்ப்பவர்கள் உள் பெட்டியில் தொடர்பு கொள்ளவும்.


நீர்வேலி பகுதியில்சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கிய தாய் கைது.

நீர்வேலி பகுதியில் தாயொருவர் சிறுமி ஒருவரை மிக மூர்க்க தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் தாயாரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
நீர்வேலி பகுதியில் வீடொன்றில் தாய் ஒருவர் சிறுமியை மூர்க்க தனமாக தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. 

அது தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவினருக்கும், கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது. 
 
அதனை தொடர்ந்து சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பிரகாரம் தாக்குதல் மேற்கொண்ட தாயார் கைது செய்யப்பட்டு உள்ளார்.
 
தற்போது தாக்குதலுக்கு இலக்கான சிறுமி மற்றும் சிறுமியின் சகோதரர்கள் உட்பட மூன்று சிறுமிகள்  பொலிஸ் பாதுகாப்பில் உள்ளனர்.


17 comments:

  1. இது பிசாசே தான்.
    ஆணால், இவ்வளவு காலமாக இந்த பிசாசிடம் பிள்ளைகளை விட்ட தந்தையும் அதே ரகம் தான்.

    ReplyDelete
  2. Well-done Siva Karan ! U saved vulnerable innocent lives from a monster !A fantastic reward for Public vigilante like Siva . we salute to u.

    ReplyDelete
  3. Immediately report to the police

    ReplyDelete
  4. அந்தப் பெண்ணை மட்டும் குற்றம் சொல்லிப் பயனில்லை, அவளை இரண்டாம் தாரமாக மணமுடித்த அக் குழந்தைகளின் தந்தையும் விசாரிக்கப் படவேண்டும்.

    ReplyDelete
  5. This is unbelievable. This kind of DEVIL in the form of Humanbeing!
    Need to be punished for the rest of her life.

    ReplyDelete
  6. Thanks siva Karan. God biess you

    ReplyDelete
  7. Y dint you inform police. U too connived it

    ReplyDelete
  8. Siva karan செய்தது மிகப்பெரும் சமூக சேவை பாராட்டியே ஆக வேண்டும்.நன்றிகள் சிவா

    ReplyDelete
  9. Good job Mr Siva Karan . This video disturbed us very much...made us tearing.
    God bless u mr Siva .

    ReplyDelete
  10. Sivakaran கள் இன்னும் இன்னும் உருவாக வேண்டும்

    ReplyDelete
  11. இவர் மிகவும் பாசமிக்க தாய்,
    இவருக்கு மரணதண்டன கொடுக்கவும் தயங்க கூடாது.....

    ReplyDelete
  12. siva karan நீங்கள் vedio எடுத்து தெரியப்படுத்தியது நல்லது ஆனால் அந்தப் பிஞ்சு குழந்தை யை இவ்வளவு அடி வாங்கும் வரை பார்த்துக் கொண்டு இருந்தததை சகிக்க முடியல்ல. i want to help affected child so pls share contact details of child

    ReplyDelete
  13. முக்கியம் : கீழே விழுந்ததும் அந்த குழந்தையின் ஆடைக்குள் கையை விட்டு எந்தப் பெண் அரக்கி நோவினை செய்வதும், மிகவும் அதிர்ச்சியுடன் எழும்பும் குழந்தை தனது ஆடையை சரி செய்வதும் கூர்ந்து கவனிக்கப்படல் வேண்டும். சிறுமியின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும் படியாக ஏதாவது நிகழ்ந்துள்ளதா என்பது கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும்.

    இதனை வாசிப்பவர்கள் இந்த விடயத்தை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவும்.

    ReplyDelete
  14. My heart doesn't let me to watch such videos.

    ReplyDelete
  15. good work by siva karan

    ReplyDelete
  16. மனித நேயமற்ற மிருகம் தாய்மை என்கின்ற தூய்மை அறியாப் பாவி இவள் கல்லால் அடித்து கெல்ல வேன்டும்

    ReplyDelete
  17. மனித நேயமற்ற மிருகம் தாய்மை என்கின்ற தூய்மை அறியாப் பாவி இவள் கல்லால் அடித்து கெல்ல வேன்டும்

    ReplyDelete

Powered by Blogger.