தொழுகை அறை மீது தாக்குதல் - யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அராஜகம் (படங்கள்)
-பாறுக் ஷிஹான்-
யாழ். பல்கலைகழகத்தினுள் இருக்கும் முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறை மீது மூன்றாவது தடவையாகவும் இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைகழகத்தினுள் இருக்கும் மாணவர் பொது மண்டபத்தில் உள்ள அறை ஒன்று முஸ்லீம் மாணவர்கள் தொழுகை செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை (5) வழமை போன்று அவ்வறைக்கு சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் அறை கதவு மூடப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு முஸ்லீம் மஜ்லீஸ் தலைவர் எம்.றஸீனுக்கு அறிவித்துள்ளனர்.
இதன் போது அவ்விடத்திற்கு விரைந்த அவர் அறைக்கு அருகே சென்று பார்த்துள்ளார்.
அவ்வேளை ஏற்கனவே தொழுகை அறை தாக்கப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக பாதுகாப்பு தரப்பினர் தாக்கப்பட்ட அறை கதவருகே அறிவுறுத்தல்(NOTICE) ஒட்டி சீல் செய்து சென்றிருப்பதை அவதானித்துள்ளதாக ஊடகவியலாளரும் முன்னாள் பல்கலைக்கழக மஜ்லீஸ் செயலாளருமான பாறுக் ஷிஹானிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஊடகவியலாளர் எடுத்த தகவலின் படி இந்த தாக்குதலினால் தொழுகை அறையில் இருந்த மின்விசிறி உள்ளிட்ட பல பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தற்போது விசாரணை நடாத்தப்படவுள்ளதால் தொழுகை அறையின் உள்ளே எவரும் செல்ல முடியாத வாறு பாதுகாப்பு ஊழியர்கள் தடை விதித்துள்ளனர். அத்துடன் ஊடகங்கள் பல்கலைக்கழகத்தினுள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவ்கள் தொழுகையை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர் கொள்வதாக தெரிவித்துள்ளதுடன் பல்கலைக்கழக நிர்வாகம் இது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என குற்றஞசாட்டுகின்றனர்.
தற்போது வரை 650 மேற்பட்ட முஸ்லீம் மாணவர்கள் இப்பல்கலைக்கழககத்தில் கல்வி கற்று வருவதுடன் இவர்களுக்கான நிரந்திர பள்ளிவாசல் இதுவரை அமைத்து கொடுக்கப்படாமல் நிர்வாகம் பாராபட்சமாக நடந்து கொண்டு வருகின்றமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
There is no need of a Praying room any more.Look at the students. We need a Masjid for our students capacity. ....Try to built a Masjid.
ReplyDeleteIf this news is true. It was not good at university level.
ReplyDeleteUniversity should have given an alternative room till investigation finish.
The wrong-doers must be punished accordingly.
This is 3rd time but still there is no punishment. Some criminal minded people are involving this kind of violence. But jaffna university administration should take proper decision otherwise university standard will be decrease in future
DeleteThis is 3rd time but still there is no punishment. Some criminal minded people are involving this kind of violence. But jaffna university administration should take proper decision otherwise university standard will be decrease in future
DeleteAjan thanks
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎல்லா பக்கமும் இந்த புலி காட்டு மிராண்டிகளின் அராஜகம் தலைவிரித்து ஆடுகின்றது. மீண்டும் குழியில் விழ தான்
ReplyDeleteManithan allatawarhal manita uruwaththil ippadi seywargal.kooly allah koduppan.
ReplyDeleteDONT SAY THIS ROOM WAS ATTACKED BY LTTE TERRORISTS .. THERE MAY BE SINKELA ROWDIES TOO AGAINST MUSLIM STUDENT.....
ReplyDeleteRECENT ATTACK ON BUDHA STATUE DONE BY KIRISTIAN RACIST.
SO WAIT AND SEE WHO WAS BEHIND IT AND THEN COMMENT PL
(இணைய நிர்வாகம் விரும்பினால், இதனை தனி ஆக்கமாக வெளியிடவும்.)
ReplyDeleteமிக வன்மையாக கண்டிக்கப்பட ஈனத்தனமான வேண்டிய செயல். தமிழ் பேசும் மொத்தக் கல்விச் சமூகமும் வெட்கித் தலைகுனிய வேண்டும், இதனை உண்மையிலேயே தமிழ் மாணவர்கள் செய்து இருந்தால். இந்தத் தொழுகை அறை முன்னரும் சில தடவைகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தாதால் இரகசிய CCTV கமெராக்களை பொருத்தி இருந்திருந்தால், மொத்த மாணவர் சமூகத்தினுள்ளும் இருக்கும் கொடிய விசக்கிரிமிகளை இலகுவாக இனம் கண்டு கொள்ள முடியுமாக இருந்திருக்கும்.
இப்படியான கேவலமான செயலை செய்தவர்கள் எல்லாம் நாளை படித்து பட்டதாரிகளாக வெளியேறப் போகின்றார்கள் என்பதை நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகின்றது. யாழ் கல்வி சமூகம் மற்றும் தமிழ் கல்வி சமூகம் இனியும் தூங்குவது போன்று நடித்துக்கொண்டு இருக்க முடியாது.
தமிழ் மாணவர்கள் பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து என்று உலகம் முழுவதும் சென்று கல்வி கற்க, வாழ முடியும் என்றால், யாழ்ப்பாணத்தில் கற்பதற்கான, வாழ்வதற்கான உரிமை சிங்கள, முஸ்லிம் மாணவர்களுக்கு, மக்களுக்கு இருக்கின்றது என்பதை அனைவரும் உணர்ந்துகொள்வது நல்லது.
மாணவர்களாக இருக்கத் தகுதியற்ற, குறுகிய இனவெறிச் சிந்தனை கொண்ட குறுமதியாளர்கள், யாழ் மண்ணை மீண்டும் கொடூர யுகத்திற்கு இட்டுச் செல்ல இடமளிக்காமல், சட்டத்தின் வரம்பிற்குள் நின்று களையெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.
யாழ், தமிழ் கல்விச் சமூகம் தொடர்ந்தும் மெளனம் சாதிக்காமல், தீவிரமாக களத்தில் குதிக்க வேண்டும், மாணவர்கள் மத்தியில் பரந்த மனப்பான்மை, சகிப்புத்தன்மை போன்றவை உடனடியாக போதிக்கப்படல் வேண்டும்.
மீண்டும் ஒரு குருதி தோய்ந்த யுகம் எம்மக்களுக்கு வேண்டாம். அதற்கு வழிகோலும் செயலில் ஈடுபடும் ஈனர்கள், தமது மாவட்டத்திற்கு வெளியிலும் உலகம் இருக்கின்றது என்பதை புரிந்துகொள்ளட்டும்.
உம்மை நடுநிலையாளர் பொல் காண்பிற்பதற்காக தமிழ் மாணவர்மீது வீண்பழி சுமத்த வேண்டாம்
Delete@Hari, 100% Agreed
ReplyDeleteதமிழ் மாணவர்கள் தான் இதை செய்தார்கள் எனயார் கூறியது.இதற்கு முன்னர் நடை பெற்ற இதே போன்றசம்பவத்தை பெரும்பான்மை இன மாணவர்கள் செய்தமை உறுதிபடுத்தபட்ட நிலையில்.ஊகத்தின் அடிப்படையில் நிங்கள் மூஸ்லீம்களிடம் நற்பெயர் எடுக்க எங்ளை(தமிழ் மாணவர்களை) அவமானடுத்த வேண்டம்.
DeleteAbsolutely Mr. Hari u r welcome
ReplyDeleteIru tharappum iinainthu walwathilthan vetti irukku
ReplyDeleteUnless and otherwise the culprit are identified.. Do not point fingers to any ethnic in general as it can worsen the unity. May be some planned this to create violence between Muslims and Hindus.
ReplyDeleteLet us force the authority to take action as per law and give alternative place for worship.
நன்றி Hari Thivahar
ReplyDelete