இம்றானுக்காக உருகிய அமெரிக்கச் சிறுவன் - ஒபாமாவுக்கு அனுப்பிய கடிதம்
-TMM-
நீங்கள் பார்க்கும் படத்தில் இடம் பெறும் சிறுவனின் பெயர் அலெக்ஸ் 6 வயதுக்கு சொந்த காரன். அமெரிக்ககுடிமகன்.
அவன் சிரிய சிறுவன் இம்றான் பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எழுதிய கடிதம் அவனது பெருதன்மைக்கும் மனிதாபி மானத்திற்கும் சான்றாக மாறி அவனை உயர்ந்து உள்ளத்திற்கு சொந்த காரனாக மாற்றியுள்ளது
ஆம் அண்மையில் சிரியாவில் நடை பெற்ற விமான தாக்குதலில் தனது குடும்பத்தை முழுமையாக இழந்துவிட்ட சிறுவன் இம்றான் இடிபாடுகளுக்கு இடையில் இருந்து இரத்த கறைகளோடு மீட்க்க பட்டான்.
அந்த சிறுவனை குறிப்பிட்டு ஒபாமாவிற்கு அவன் எழுதிய கடிதத்தில் ஒபாமா அவர்களே சிரியாவின் சிறுவன் இம்றானை நீங்கள் அறிவீர்களா?
அவனை அழைத்து வாருங்கள் நாங்கள் அவனை வரவேற்று எங்கள் வீட்டில் குடியமர்த்த தயாராக உள்ளோம்
அழைத்து வரும் நாளை நீங்கள் கூறுங்கள் பலுன்களோடும் மலர்களோடும் அவனை வரவேற்க்க நாங்கள் வீதிக்கு வருகிறோம்
அவனை எனது சகோதரானாக ஏற்று கொள்ள நான் தயாராக உள்ளேன்
இவ்வாறு அலெக்ஸ் ஒபாமிற்கு எழுதிய கடிதத்தை அண்மையில் ஒபாமா ஒரு நிகழ்ச்சியில் வெளியிட்டு பெருமிதம் அடைந்தார்
மனிதன் வளரும் அளவு
ReplyDeleteமனித நேயமும் வளராதெனின்
இனி வரும் அனைவரும்
இந்த அலெக்ஸ் போலவே
இருந்து விட்டுப் போகட்டும்!
மதங்களால் பிரிந்து கிடப்பதை விட மனிதாபிமானத்தால் ஒன்றிணைவதே மேலானது.
ReplyDelete