Header Ads



மேஜர் ஜெனரல் குணரத்ன நேற்று ஓய்வு - 'நந்திக்கடலுக்கான பாதை' இன்று வெளியாகிறது


மேஜர் ஜெனரல் குணரத்ன, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து -05- நேற்றுடன் ஓய்வுபெற்றார்.

இறுதிக்கட்டப் போரில், மேஜர் ஜெனரல் குணரத்ன 53 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.

கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் குணரத்ன, 2001 ஆம் ஆண்டுக்கும், 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், 523, 551 ஆவது பிரிகேட்களினதும், வான்வழி தாக்குதல் படைப்பிரிவினதும் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர். பின்னர், 55ஆவது, 53ஆவது டிவிசன்களி்ன் கட்டளை அதிகாரியாக இருந்தார்.

35 ஆண்டுகள் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவுக்கு கஜபா படைப்பிரிவின் சார்பில் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதையும்,  விருந்துபசாரமும், நேற்றுமுன்தினம் அளிக்கப்பட்டது.

இதனிடையே இவர் எழுதிய, நந்திக்கடலுக்கான பாதை நூல் இன்று -06- வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.