Header Ads



மகிழ்ச்சியில் மைத்திரி

வெளிநாட்டு நடைமுறைகளில் வெற்றிகளின் ஊடாக நாட்டின் எதிர்காலத்தை நம்பிக்கையானதாக மாற்ற தற்போதைய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சகல அரச தலைவர்களும் இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டங்கள் தொடர்பில் சிறந்த வரவேற்பபை வழங்கியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நியூயோர்க்கில் நடந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை கூறியுள்ளார்.

சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், நீதிமன்றத்தின் சுதந்திரம் ஆகிய நல்லாட்சியின் எண்ணக்கருக்களை செயற்படுத்தி வருவதன் காரணமாக இலங்கைக்கு சர்வதேசத்தின் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதேவேளை, கொள்கைகள் தொடர்பான விடயங்கள் காரணமாக கடந்த அரசாங்க காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தூர விலகி நின்றது.

அரசாங்கத்தின் கொள்கையானது நாட்டு மக்களுக்கு மாத்திரமல்லாது உலகத்திற்கும் தெளிவாகினால், நாட்டின் அங்கீகாரம் தொடர்பான பிரச்சினை எழாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.