அச்சம் ஏற்படுகிறது - நஸீர் அஹமட்
நம் இலங்கைத் தேசம் போதைப்பொருள் பாவனையற்ற ஒரு சுத்தமான தேசமாக மாற்றியமைக்க இளைஞர் யுவதிகள் பொதுமக்கள் அனைவரும் முன்வரவேண்டும். இவ்வருடத்துக்குள் ஹெரோயின், கஞ்சா, இன்னும் பல போதைப்பொருட்கள் இலங்கையின் நாலா பகுதிகளில் இருந்தும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ்தகவல்கள் தெரிவிக்கும்போது இவைகள் எங்கிருந்து யாரால் கொண்டுவரப்படுகிறது என்பதனைக் கண்டறிந்து நல்லாட்சியின் தண்டனை வழங்குவதன் மூலம் முற்றாகத் தடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஹெரோயின் விநியோக மையமாக இலங்கையில் பல இடங்களை குறிப்பிடும் பொலிசார் அப் பகுதியினை சரியான கண்காணிப்பின் மூலம் தவறுகள் நடப்பதை கண்டறிந்து அதனைத் தடுக்கும் பணியை மும்முறமாகச் செய்ய வேண்டும். இன்னும் சில வருடங்களில் இலங்கையில் போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞர்கள் அதிகரித்து விடுவார்கள் என்ற அச்சம் ஏற்படுகிறது.
இதேவேளை, இலங்கையின் கடற்பகுதியில் வெளிநாட்டவர்களின் வருகையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் வருகையிலேயே அதிகமான போதைப் பொருட்கள் இலங்கையை வந்தடைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முதல் இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் 11 வெளிநாட்டவர்களுடன் 101 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றியுள்ளமையும், மிகப் பாரியளவிலான இந்த போதைப் பொருள் கடத்தலில் இலங்கையை சேர்ந்தவர்களும் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளதுள்ளமை இங்கே சுட்டிக்காட்டப் படவேண்டிய விடையமாகும்.
எனவே போதைப்பொருள் பாவனையற்ற இலங்கைத் தேசமாக நம் நாட்டை மாற்றியமைக்க இன்றைய மாணவர்கள், இளஞர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று கிழக்கு முதல்மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் மட்டக்களப்பில் இடம்பெற்ற சிவில் நிருவாகமும் சட்ட ஒழுங்கும் சம்மந்தமான கூட்டத்தை ஏற்பாடு செய்து தலைமையேற்று நடாத்திய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கிழக்கை போதைப்பொருள் பாவனையற்ற மாகாணமாக மாற்ற சகல நடவடிக்கையினையும் எடுப்பேன் என்று குறிப்பிட்டதுடன் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபர்களின் தொலைபேசி இலக்கத்துக்கு இரகசியமாக போதைப் பொருள் விநியோகம், பாவனை, உடனதையாக இருத்தல் சம்மந்தமான தகவல்களைத் தெரிவிக்குமாறு குறிப்பிட்டிருந்தார்.
எனவே நம் இலங்கைத் தேசம் போதைப்பொருள் பாவனையற்ற ஒரு சுத்தமான தேசமாக மாற்றியமைக்க கிழக்கு மாகாணத்தை ஒரு முன்னுதாரணமான மாகாணமாக மாற்றியமைக்க சமூக அமைப்புக்கள், இளைஞர் யுவதிகள் பொதுமக்கள் அனைவரும் கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர், இதுசம்மந்தப்பட்டவர்களுடன் இணைந்து நல்லாட்சி அரசாங்க ஆட்சியியை போதைப் பொருள் பாவனையை மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை ஒழித்த ஆட்சியாகவும் மாற்றவேண்டும் என்று குறிப்பிட்டார்.
Post a Comment