உலகின் அனைத்து சிந்தனையையும் விஞ்சிய, குர்ஆனிய சிந்தனை
-ARM INAS-
வறுமை பிரச்சினை
அநாதைகளின் பிரச்சினை
தலைதூக்கி தாண்டவமாடும் ஒரு சமூகத்தில் அவர்களின் பிரச்சினையை தீர்க்க எந்த முயற்சியும் வேலைத்திட்டமும் இல்லாத சமூகத்தில் தொழுகையாளிகளின் தொழுகையில் எந்தப் பயனுமில்லை
அவர்கள் வெறுமனே தொழுவதுபோல, பாசாங்கு செய்கிறார்கள் நடிக்கிறார்கள்.
அவர்களின் தொழுகை உண்மையான தொழுகையாக இருந்தால் சமூகத்தில் ஏழைகளும் அநாதைகளும் ஆதரிக்கப்பட்டிருப்பார்கள்.
பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகவும் குறைந்த நிலையிலேயே இருக்கும்.
ஏழையின் பரிதாப நிலையை கண்டு, அநாதையின் பரிதாப நிலையை கண்டு, உன் மனம் துடிக்கைவில்லையெனில் நீ மறுமையை மறுப்பவன்
முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள தகுதியில்லாவன்
நீ மனிதனாக இருக்க தகுதியற்றவன்
சோலிசமோ உலகின் எந்தப் பொருளாதார சிந்தனையோ முன்வைக்காத அல்லாஹ்வின் ஆழ்ந்த அறிவு வெளிப்பாட்டின் விளைவால் மனிதகுலத்துக்கு அருளப்பட்ட மிக சீரியசான ஆழ அர்த்தம் பொதிந்த சிந்தனைதான் சூரா மாஊன்
Post a Comment