Header Ads



ஆண் பாதுகாவலர் முறையை நீக்குமாறு, சவூதி அரேபிய பெண்கள் மனு

சவூதி அரேபியாவின் ஆண் பாதுகாவலர் முறையை நீக்கக் கோரி 14,000க்கும் அதிகமான பெண்கள் கையொப்பமிட்ட மனுவொன்று அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சவூதி பெண்கள் வெளிநாடு செல்வதற்கு ஆண் காவலர்களின் அனுமதி கட்டாயம் என்பதோடு தொழில் அல்லது கல்விகற்கவும் இந்த அனுமதி தேவைப்படுகிறது.

டுவிட்டர் சமூகதளத்தின் ஊடான பிரசாரத்தை அடுத்து இந்த விவகாரம் தொடர்பில் பெரும் எண்ணிக்கையில் எதிர்ப்பு ஏற்பட்டிருப்பது இது முதல் முறையாகும். இந்த பிரசாரம் குறித்து பெருமைப் படுவாத குறிப்பிட்டிருக்கும் செயற்பாட்டாளர் அஸீஸா அல் யூசுப், இதற்கு முறையான பதில் கிடைக்க வேண்டும் என்றார்.

கடுமையாக பழைமை பேணு சவூதியில் கடவுச்சீட்டு பெறுவது, நாட்டை விட்டு வெளியேறுவது அல்லது திருமணம் முடிப்பதற்கு தந்தை, சகோதரர் அல்லது ஏனைய ஆண் உறவினர் -- விதவையாயின் சிலநேரம் மகனின் அனுமதி பெறவேண்டி இருக்கும்.

பெரும்பாலான பணியிடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் ஆண் பாதுகாவலரின் அனுமதி கோரப்படுகிறது. எனினும் இது சட்டத் தேவையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீடு வாடகைக்கு பெறுவது, மருத்துவ சிகிச்சை அல்லது சட்ட உரிமை ஒன்றை கோருவதற்கும் ஆண் பாதுகாவலரின் அனுமதி கோரப்படுகிறது. ஆண் பாதுகாவலர்களின் துஷ்பிரயோகத்திற்கு முகம்கொடுக்கும் பெண்கள் உதவி நாட மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பே உள்ளது. பெண்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் உலகின் ஒரே நாடாகவும் சவூதி உள்ளது.

இந்த மனு குறித்து உத்தியோகபூர்வ பதில்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

எனினும் இந்த ஆண் பாதுகாவலர் முறையில் மாற்றம் கொண்டுவருவது குறித்த பரிந்துரைகளை சவூதி தலைமை முப்தி அப்துலஸிஸ் அல் ஷெய்க் கடுமையாக எதிர்த்திருந்தார். இது தொடர்பான பிரசாரங்கள் “இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்செயல்கள்” என்று எச்சரித்திருந்தார். 

No comments

Powered by Blogger.