முஸ்லிம்களே, சிங்களவர்களிடம் உள்ள நம்பிக்கையை நாசமாக்காதீர்கள்..!
-எம்.எல்.எஸ்.முஹம்மத் - இரத்தினபுரி-
இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய வியாபாரங்களுள் ஒன்றான இரத்தினக்கல் வியாபாரம் மிக நீண்ட காலமாக நம்பிக்கையின் அடிப்படையில் மாத்திரம் இடம்பெற்று வரும் ஓர் முக்கிய வியாபாரமாகும்.
எனினும் முஸ்லிம் சமூகத்தின் ஒருசில தவறான நடவடிக்கைகளினால் மேற்படி இரத்தினக்கல் வியாபாரம் இலங்கை முஸ்லிம் சமூகத்திடமிருந்து மெதுவாக விலகிச் சென்று கொண்டிருக்கிறது.
எந்த விதமான எழுத்து மூல ஆவணங்களின் உதவிகளுமின்றி வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் மாத்திரம் பாரம்பரிய மரபுகளைப் பேணி இடம்பெற்று வரும் இரத்தினக்கல் வியாபாரத்தில் இரத்தினபுரி மக்களும் பேருவலை முஸ்லீங்களும் பல நூற்றாண்டு காலமாக மிக ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் ஈடுபட்டு வந்துள்ளனர் .
எனினும் அண்மையில் பேருவலையைச் சேர்ந்த ஓர் முஸ்லிம் இரத்தினக்கல் வர்த்தகரொருவர் இரத்தினபுரி மாணிக்க வியாபாரிகளுக்கு பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்துள்ள சம்பவமொன்று தொடர்பிலான சுவரொட்டிகள் தமிழ் சிங்கள மொழிகளில் இரத்தினபுரி நகரின் பல பகுதிகளிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது .
இரத்தினபுரி இரத்தினக்கல் வர்த்தகர்கள் சங்த்தின் பெயருடன் வெளியிடப்பட்டுள்ள மேற்படிச் சுவரொட்டியில் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள குறிப்பிட்ட முஸ்லிம் வர்த்தகரின் பெயரும் அவரின் தந்தையின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
.அத்துடன் இதன்பிறகு பேருவலை முஸ்லீங்களுடன் நேரடியாக பணத்திற்கு மாத்திரமே இரத்தினக்கல் வியாபாரத்தை மேற்கொள்ளுமாறு இரத்தினபுரி இரத்தினக்கல் வர்த்தகர்களை மேற்படி வர்த்தகர் சங்கம் வேண்டிக்கொண்டுள்ளது.
Please do not genrealise this..bad act of one man can not be general rule of Muslim community..
ReplyDeleteWhy did they put poster like this ?
It is wrong for all reasons to do it?
If such man had done this take legal action or sort this out .. in a non Muslim country..this notice will give bad impression to all about our community..
This is not a way to solve this problems
He should be taken to police or he should be warned by mosques.
I do not support him at all...he done some thing wrong ..but poster is not good idea ..
It put him risk for his life
He will never give them money back
He will run.away
ஏன் மோசடி செய்தவரின் பெயரை மறைத்து இரொப்பது பெயர் தெரிந்தால் மற்றவர்கள் பயப்படுவார்கள் ,பெயருடன் போட்டோவும் போடுவதுதான் செரியான வேலை
ReplyDeletePlease obey to Allah's order when you do business. Keep a written record of each transaction whenever you have been involved in the trade. It's a must and give evidence to take legal actions against the wrongdoers in future.
ReplyDelete