சவூதி அரேபியாவில், இலங்கையர் தற்கொலை
காதல் விவகாரத்தினால் வவுனியா பாரதிபுரத்தினை சேர்ந்த ரவீந்திரகுமார் சதீஸ் என்ற இளைஞன் நேற்று (18.09.2016) சவுதியில் தற்கொலை செய்துள்ளார்.
வவுனியா விநாயகபுரம் பாரதிபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் சதீஸ்(24வயது) என்ற இளைஞன் கடந்த 18மாதங்களுக்கு மேலாக சவுதி அரேபியாவில் சாரதியாக பணிபுரிந்து வந்துள்ளார்.இவர் நேற்று அதிகாலை 5.30மணியளவில் அவரது அறையில் ( சவுதிஅரேபியாவில்) தற்கொலை செய்துள்ளார்.
முகநூலில் ஏற்ப்பட்ட காதல் விவகாரத்தினால் இவர் தற்கொலை செய்துள்ளதாக இவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர்.
மேலும் இவரது சடலம் இலங்கை எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
Post a Comment