Header Ads



ஜனாதிபதிக்கு மைத்திரிக்கு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் 'பொதுச் சுகாதார சிறப்பு விருது' கிடைத்தது


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் 'பொதுச் சுகாதார சிறப்பு விருது - 2016' வழங்கி கௌரவிக்கபட்டார். இவ்விருதானது வருடம்தோறும் பொதுச் சுகாதார துறையில் சிறந்த தலைமைத்துவ பண்புகளையும், அபூர்வமான சாதனைகளை மேற்கொண்ட தனிநபர்களை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றது.  

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பிராந்தியத்தின் பொதுச் சுகாதாரத் துறையில் சிறப்பான்மைக்காக வழங்கப்படும் இவ்விருதினை உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய பணிப்பாளர்    Dr. பூனம் கேத்ரபால் சிங் அவர்களால், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது, ஜனாதிபதி அவர்கள் இலங்கையில் சுகாதார சேவைகளை பலப்படுத்துவதற்கு அதிலும் குறிப்பாக புகையிலைப் பாவனையை கட்டுப்படுத்துவதற்கும், போதைப்பொருள் கட்டுப்பாடுகள் தொடர்பான ஒழுங்குவிதிகளை உருவாக்கியமைக்கும், சிறுநீரக நோயினை கட்டுப்படுத்துவதற்கும் ஆற்றிய சிறப்பான பணிகளுக்குமாக வழங்கி வைக்கபட்டது.  

இவ் விருதானது கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று (05) மாலை இடம்பெற்ற நிகழ்வில்வைத்து வழங்கப்பட்டது.

இதேவேளை உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென் கிழக்காசியாவிற்கான பிராந்திய குழுவின் 69ஆவது கூட்டத்தொடர் கொழும்பில் இடம்பெறுகின்றது. இந்நிகழ்வில் 14 நாடுகளின் தூதுக்குழுவினர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

சுகாதார அமைச்சர் Dr. ராஜித சேனரத்ன உள்ளிட்ட பிராந்திய உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்திய பணிப்பாளர்             Dr. பூனம் கேத்ரபால் சிங் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். 


No comments

Powered by Blogger.