மரண தண்டனைக் கைதி எப்படி மடிக்கணினி - போனை எப்படி வைத்திருக்க முடியும்..?
தனது தந்தையின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள எஸ்.எவ். பண்டார என்ற நபரின் பேஷ்புக் கடந்த 12 ஆம் திகதி முதல் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
தனது பேஷ்புக் கணக்கில் இட்டுள்ள பதிவொன்றில் ஹிருணிகா இதனை கூறியுள்ளார்.
சிறைச்சாலைக்குள் மடிக்கணினி அல்லது ஸ்மார்ட் போனை எப்படி தம்வசம் வைத்திருக்க முடியும் எனவும் ஹிருணிகா கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறாயினும் பேஷ்புக் , மின்னஞ்சல் ஆகியவற்றின் கடவுச்சொற்களை பயன்படுத்தி சிறைச்சாலைக்கு வெளியில் எவரும் புதுப்பிக்க முடியும் என்ற போதிலும் இது சிறைக்குள் நடக்கும் விடயம் என்பதால், தனக்குள் சந்தேகம் ஒன்று இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பொலிஸ்மா அதிபரும் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment