அநுராதபுரத்தில் தீ அனர்த்தம்
அநுராதபுரம் - பொதெனாகம மின் உபகரண வர்த்தக நிலையமொன்றில் இன்று -20- அதிகாலை பாரிய தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தினை அடுத்து, தீயணைக்கும் படையினர் மற்றும் அப்பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை தீ கட்டிடங்களுக்கு பரவாத வகையில் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தீ அனர்த்தம் காரணமாக குறித்த வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. சேத விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நாட்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது எதையோ மறைமுகமாக உணர்த்துகிறது
ReplyDelete