Header Ads



இலங்கையில் தர்ம ராஜ்ஜியத்தை, உருவாக்குவதே எமது நோக்கம் - ஹெல உறுமய

இலங்கையில் தர்ம ராஜ்ஜியம் ஒன்றை ஏற்படுத்தும் ஜாதிக ஹெல உறுமயவின் நோக்கம் தொடர்ந்தும் அப்படியே உள்ளதாக அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று /28/ நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓமல்பே சோபித தேரர் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.

எனினும் கட்சியின் அனைத்துச் செயற்பாடுகளிலும் தனது பங்கு இருக்கும் என அவர் முன்னர் குறிப்பிட்டார்.

நாட்டில் இருக்கும் இரு பிரதான கட்சிகளுக்கு மாற்றாகவே ஜாதிக ஹெல உறுமய உருவாக்கப்பட்டதாக இந்த கட்சியை ஆரம்பிக்கும் பொழுது அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்.

இலங்கையில் தர்ம ராஜ்ஜியத்தை உருவாக்குவதே தமது நோக்கம் என்றும், அதற்காக தாங்கள் உழைப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

எனினும் மற்றைய கட்சிகளைப் போன்று அரசாங்கத்தோடு இணைந்து ஆட்சியின் பங்காளிகளாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. நல்லது சார்

    ReplyDelete
  2. திராட்சை பழம் எட்டாக்கனியாகி புளிக்கின்றது போலும்

    ReplyDelete

Powered by Blogger.