மைத்திரி மீது நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம்கள், ஹக்கீம் மீது சந்தேகம் கொள்கிறார்கள் - ஹிஸ்புல்லா
-விடிவெள்ளி-
முஸ்லிம் காங்கிரஸின் எந்தவொரு உறுப்பினரும் இதுவரை பகிரங்கமாக வடக்கிலிருந்து கிழக்கு பிரிய வேண்டுமென பேசவில்லை. இந்த நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் வட கிழக்கு இணைப்புக்கு இரகசியமாக இணக்கம் தெரிவித்துள்ளதா என்ற சந்தேகம் எங்களுக்கிருக்கின்றது என மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடியிலுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி மண்டபத்தில் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாண முஸ்லிம்களின் உணர்வையும் அபிலாஷைகளையும் சர்வதேச சமூகத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் ஏனைய தமிழ் கட்சிகளுக்கும் மிகவும் தெளிவாக சொல்ல வேண்டிய தேவை முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்குண்டு.
முஸ்லிம் சமூகம் சார்ந்த முஸ்லிம்களின் அபிலாஷைகள் எப்படி இருக்க வேண்டுமென்று முஸ்லிம் சமூகம் சொல்லாமல் அமைதியாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொல்வதையும் சர்வதேச சமூகம் சொல்வதையும் ஏற்றுக்கொண்டதாகிவிடும்.
முஸ்லிம்களுடைய அதிகமான செல்வாக்கைப் பெற்ற மிக முக்கியமான கட்சிதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் சில நேரங்களில் தமது பேச்சுக்களில் வட கிழக்கு இணைந்தால் என்ன என்ற அடிப்படையிலும் பேசி வருகின்றது. இதுவரையிலும் வட கிழக்கு பிரிய வேண்டுமென சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பேச வில்லை. இது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவன் என்ற அடிப்படையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப போராளி என்ற அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை புரிந்தவன் என்ற அடிப்படையில் வடக்கிலிருந்து கிழக்கு பிரிய வேண்டுமென்பதை பேசியாக வேண்டும்.
முஸ்லிம் அரசியல் தலைமைகளில் எல்லோரும் பேசாமல் இருந்தால் முஸ்லிம்கள் வட கிழக்கு இணைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்களா? முஸ்லிம்கள் அமைதியாக இருக்கின்றார்கள்; ஆகவே முஸ்லிம்களும் இதற்கு ஆதரவானவர்கள் என்று அராசங்கமும் கருதலாம்.
ஆகவே வடக்கிலிருந்து கிழக்கு பிரிய வேண்டுமென தொடாச்சியாக நாங்கள் பேசி வருகின்றோம். அதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் பேசி வருகின்றார்.
அதே போன்று நான் மிகத்தெளிவாக பாராளுமன்றத்திலும் கட்சி தலைவர்களின் கூட்டத்திலும் பகிரங்கமாக பேசி வருகின்றேன்.
கிழக்கிலே இருந்து முஸ்லிம்கள் தொடர்பான அல்லது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட வேண்டுமென்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயற்பாட்டினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து முஸ்லிம்கள் ஓரமாகி இருக்கின்றார்கள்.
எமது ஐக்கிய மக்கள் சுந்திரக்கூட்டமைப்புக்கு இருந்த கணிசமான வாக்குகள் எங்களை விட்டும் பிரிந்திருக்கின்றது.
தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் சகல இனங்களையும் உள்வாங்கி ஒன்று சேர்த்து எங்களுடைய நிருவாகத்தையும் செற்பாட்டையும் ஆரம்பித்திருக்கின்றோம்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை முஸ்லிம் பிரதேசங்களில் மீண்டும் கட்டியெழுப்புவதென்பது கஷ்டமான காரியமில்லை.
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் சுதந்திரக் கட்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்கள் இருந்தன. அவைகள் தற்போது ஓரமாகியிருக்கின்றன.
எதிர்வரும் ஆண்டு முதல் பகுதியில் நடைபெறும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் கணிசமான ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி கைப்பற்றுவதற்காக நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதற்காக ஜனாதிபதி என்னை அழைத்து கட்சியைப் பலப்படுத்துமாறு கூறியுள்ளார்.
முஸ்லிம்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸ் மீது நம்பிக்கை இழந்துள்ளார்கள்.
முஸ்லிம் காங்கிரசிலிருந்த நம்பிக்கை இழக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே அந்த மக்களுக்கு நாங்கள் ஒரு தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டும். அவர்களை நாங்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஒன்று சேர்த்து அந்தப் பணியை செய்யவுள்ளோம்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் எங்களுக்குமிடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என்பதையே நான் விரும்புகின்றேன்.
முட்டி மோதிக்கொண்டு தொர்ச்சியாக இருக்க முடியாது. நாங்கள் பிளவும் படவும் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Electionla HISBULLA WA TOKKA SEYTATU AEN AWAR MEETU MAKKALUKKU NAMBIKKAI ILLAI. HISBULLAWUKKU MAITREE KODUTHTHA PICHCHAI INDA PADAVI.HAKEEM MEETU MAKKAL IRUPPATANAL THAN AWAR WENDRAR. ADUTHTHA MURAYUM HISBULLAH UNGALUKKU AAPPU THAN.TOLVI NICHCHIYAM.
ReplyDeleteஉண்மை சொன்னீர்கள் ஹிஸ்புள்ளா அவரகளே சில விடயங்களை தவிர,முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனித்துவமான தனியான கட்சி வேன்டும் அது இப்போது உள்ள முஸ்லிம் காங்கிரஸ் அல்ல
ReplyDeleteExcellent
ReplyDelete