மஹிந்தவை தவிர சகலரும் தற்போதைய அரசில் உள்ள நிலையில், எப்படி நீதியை எதிர்பார்க்கமுடியும்..? - அனுரகுமார
மீனவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதற்குத் தற்போதைய அரசாங்கம் என்னநடவடிக்கை எடுத்தது? நாட்டிலுள்ள பல கிராமங்களில் மக்கள் குடிப்பதற்குப்போதுமான நீரில்லை. அதிலும் சுத்தமான நீரைப் பெற்றுக் கொள்ள முடியாதவாறு பலரும்அவதிப்படுகிறார்கள். மூன்று வேளைக்கும் போதுமான உணவின்றிப் பல மக்கள்வாடுகிறார்கள். இந்த நிலையில் எதற்காக இந்த அரசாங்கம்? அதனால், இந்தஅரசாங்கத்தை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார் மக்கள் விடுதலை முன்னணியின்தலைவர் அனுரகுமார திசாநாயக்கா.
’நாட்டின் எதிர்காலமும், இடதுசாரிகளின் கடமையும்’ எனும் தொனிப்பொருளில்மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்காவின் தலைமையில்பகிரங்கக் கருத்தரங்கொன்று இன்று சனிக்கிழமை(17) முற்பகல்-11.15 மணிமுதல் யாழ். சங்கானை குபேரன் பிளாஸா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமானஇராமலிங்கம் சந்திரசேகர், கட்சியின் மூளாய்ப் பிரதேச அமைப்பாளர் எஸ்.பரமலிங்கம், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் சின்னத்துரைஇராஜேந்திரன், வலிகாமம் மேற்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நா.திரிலோகநாதன், இலங்கை மின்சார சபை தொழிற் சங்கத்தின் வடமாகாண தொழிற் சங்கத்தலைவர் தோழர் இளங்குமரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் யாழ். சங்கானைக்கு இன்று வருகை தந்தமையைமுன்னிட்டு சங்கானை நகரம் விழாக் கோலம் பூண்டிருந்ததுடன், தொண்டர்கள் வெடிகொளுத்தி அவருக்கு மகத்தான வரவேற்பளித்தனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
1948 ஆம் ஆண்டு முதல் மாறி மாறி ஆட்சி புரிந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தற்போது ஒன்றாக ஆட்சி செய்கிறார்கள்.தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் தோல்வியடைந்தவையாகவேயுள்ளன.
மகிந்த ராஜபக்ச, சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க,மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தனி நபர் குறைபாடுகளால் தான் அவர்களின்ஆட்சிகள் தோல்வியடைந்தவையாக இருக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவரின் கொள்கைகளும்தான் நாட்டில் நெருக்கடிகள் ஏற்படுவதற்குக் காரணம்.
முதலாளித்துவ ஆட்சியில்நாம் எவ்வாறு ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியும்?எங்கள் மக்கள் கஷ்டப்பட்டு, வியர்வை சிந்தி உழைத்த பணத்தைஅதிகாரத்திலுள்ள ஒரு சிறிய கும்பல் மூட்டை கட்டிக் கொண்டு வீடு செல்கின்றது.
கடந்த கால ஆட்சிக் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் தாராளமாக நடைபெற்றன. மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுனா மகேந்திரன் பதவியிலிருந்த போது அவரதுமருமகன் ஆலோசியஸ் மகேந்திரனுடன் இணைந்து மத்திய வங்கியின் முறிகள் மோசடியானமுறையில் விற்கப்பட்டன.
இதன் மூலம் அர்ஜுன மகேந்திரனின் மருமகனுக்கு 168கோடி ரூபா வருமானமாகக் கிடைத்தது. இந்த மாவட்டத்தில் சேர்த்தாலும் கூட நாங்கள்அவ்வாறான தொகையைப் பெற முடியாது. நாங்கள் உழைக்கின்ற பணமெல்லாம் இவ்வாறுமோசடியாகப் பயன்படுத்துவதை நாங்கள் எவ்வாறு அனுமதிக்க முடியும்?
மகிந்த ராஜபக்சவின் மகன். முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தவின் பிள்ளைகள்ஆகியோர் வெளிநாடுகளில் தான் கல்வி பயின்றார்கள். நாட்டினை ஆட்சி செய்யும்ஆடசியாளர்களின் பிள்ளைகள் இங்குள்ள பாடசாலைகளில் கற்பதில்லை. அவர்களதுபிள்ளைகள் எங்கள் பிள்ளைகளோடு பிள்ளைகளாகக் கல்வி பயிலுவதில்லை, எங்கள்பிள்ளைகள் செல்லும் பஸ் வண்டிகளில் அவர்களது பிள்ளைகள் பயணம் செய்வதில்லை.
ஏனெனில், அவர்கள் எங்கள் வர்க்கமல்ல. அவர்கள் மேல் வர்க்கத்தைச்சேர்ந்தவர்கள்.மகிந்த ராஜபக்ச, ஹக்கீம், தொண்டமான், மனோ கணேசன், விமல் வீரவன்ச, சம்பிக்கரணவக்க, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இணைந்து முன்னைய ஆட்சியைநடாத்தினார்கள்.
அவர்கள் இனவாதத்திற்கு துணை போனதுடன், மக்களின்உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காத வகையில் மோசமான ஆட்சியை நடாத்தினார்கள்.அவர்களில் மகிந்த ராஜபக்சவைத் தவிர ஏனைய அனைவரும் தற்போதைய அரசாங்கத்தில்அங்கம் வகிக்கிறார்கள்.
ஆகவே, தற்போதைய ஆட்சிக் காலத்திலும் நாம் நீதியைஎவ்வாறு எதிர்பார்க்க முடியும்? எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment