வர்த்தகர் ஷகீப் படுகொலை - அதிரவைக்கும் தகவல்களை வெளியிடும் பொலிஸார்
பம்பலப்பிட்டி வர்த்தகர் சுலைமானின் வர்த்தக ஸ்தாபனத்தில் நிதிக்கு பொறுப்பாக இருந்த நபரே, இரண்டு கோடி ரூபா கப்பம் கேட்டு அவரை கடத்திச் செல்லும் திட்டத்தை வகுத்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஃபாக்கீர் அஸ்லம் மொஹமட் என்ற இந்த நபர் கடந்த 8 வருடங்களாக வர்த்தகர் சுலைமானிடம் பணி புரிந்து வந்துள்ளார்.
வர்த்தகருக்கு கீழ்ப்படிந்து நடந்து கொண்டதன் காரணமாக, அவரிடம் நிதிப் பொறுப்பையும் சுலைமான் ஒப்படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வர்த்தகர் சுலைமானின் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தனது எஜமானிடம் பெருமளவில் பணம் புழங்குவதை நன்றாக அறிந்து கொண்ட பின்னர், சந்தேக நபர் இந்த திட்டத்தை தீட்டியுள்ளார்.
இதனடிப்படையில் கப்பம் பெறுவதற்காக வர்த்தகரை கடத்திச் சென்றுள்ளனர்.இந்த கொலையுடன் தொடர்புடைய 8 சந்தேக நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சந்தேக நபரின் வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. வீட்டை புனரமைக்க வர்த்தகர் 5 லட்சம் ரூபா கொடுத்துள்ளதுடன் அவரது மனைவி மேலும் 50 ஆயிரம் ரூபாவை கொடுத்துள்ளார்.
வர்த்தகர் சுலைமானை கடத்த ஒன்றரை மாதங்கள் திட்டமிட்டுள்ளனர். கடத்திச் செல்ல பயன்படுத்திய வாகனத்திற்கு ஒரு நாளுக்கு 34 ஆயிரம் ரூபாவை வாடகையாக செலுத்தியுள்ளனர்.
கடத்தலுடன் சம்பந்தப்பட்ட நபரது மனைவியின் தங்க ஆபரணங்களை அடகு வைத்தே இதற்கான பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
வாகனத்தில் வைத்து கூரிய ஆயுதம் ஒன்றில் வர்த்தகரின் தலையில் தாக்கியதால், அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரண்டு கோடி ரூபாவை கப்பமாக பெற வேண்டும் என்பதே கடத்தியவர்களின் நோக்கம் என்ற போதிலும் தலையில் தாக்கியதால், அவர் உயிரிழந்து விடுவார் என இவர்கள் எண்ணியிருக்கவில்லை.
வர்த்தகர் கடத்திச் செல்லப்பட்ட தினத்திற்கு மறுதினம் சந்தேக நபர் வர்த்தக ஸ்தாபனத்திற்கு சென்றுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய வர்த்தகரின் தந்தை தனது மகனை விடுவிக்க பணத்தை கொடுப்பார் என்ற நம்பிக்கையில் சந்தேக நபர் அங்கு சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட 8 பேரில் 6 பேர் முஸ்லிம்கள் எனவும் சம்பவத்தின் பின்னணியில் இனவாத நோக்கங்கள் எதுவுமில்லை எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை குறுகிய காலத்தில் கைது செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை போலிசார் பாராட்டப்பட வேண்டியவர்கள் துல்லியமாக கண்டறியும் உளவுத்துறை நம் நாட்டில் இருப்பதையிட்டு பெருமைப்படுவோம் போலிசாருக்கும் மாஅதிபருக்கும் நன்றிகள்.
ReplyDeleteAbsolutely brother
Deleteயாராக இருந்தாலும் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்
ReplyDeleteஉழைத்து வாழ தெரியாத சோம்பறி மனிதர்கள் இவர்கள்.ஒரு முஸ்லீம் என்றால் எது ஹலால் எது ஹாரம் என்று தெரிந்து இருக்க வேண்டும் அப்படியும் இல்லாவிட்டால் என்னா அருத்தம் முஸ்லிமாக வாழ!
ReplyDeleteThere are definitely pigs in human forms in all our
ReplyDeletecommunities in the country . Muslims had only few of
them decades ago but of today , situation has gone
to dogs . Even in far away Muslim villages, it is
hard or nearly impossible to find a good Muslim
in spite of having dozens of religious organizations
and thousands of mosques with foreign learned Ulemas.
What a hell like situation ?
This is a good investigation..police should have all professional training and experience to do this.in western world forensic science is so advanced they can find killer many ways.yet. Sri Lanka police coming out of traditional methods of investiration. It is in the national in the national interest of this great nation beyond all radical or religious limitations we should support police on this matter...national intersects, national security and people health and safety should come first .police have done great service..this is lesson for future kilers and public warning..murder and rape and robery should not have any place in this country...
ReplyDeleteSubhanallah innocent life is lost. Our hearts are suddened by the incidence. Allah has revealed the truth. The killer dogs and their associates should be hanged. We should salute our police chief and intelligent offficers for their commitment and hard work
ReplyDeleteஇப்போது எத்தனை குடும்பங்கள் நடுவீதியில்?தனக்காக உதவி செய்த ஒருவரை பணத்துக்காக கொன்று அவரின் குடும்பத்தை கலங்க வைத்து,இப்போது இந்த நாய்களினதும் குடும்பம் நடுவீதியில் கேவலமாக...
ReplyDeleteஇப்போது எத்தனை குடும்பங்கள் நடுவீதியில்?தனக்காக உதவி செய்த ஒருவரை பணத்துக்காக கொன்று அவரின் குடும்பத்தை கலங்க வைத்து,இப்போது இந்த நாய்களினதும் குடும்பம் நடுவீதியில் கேவலமாக...
ReplyDeleteas soon as the suspects are proved, all these culprits must be hanged forthwith.
ReplyDeleteWell done. 👍
ReplyDeleteஆனாலும் முன்னாடி இவர்கள் தானோ பல கொலைகளுக்கு,உடநதையாக இருந்ததை நிருபிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையை நாம் பார்க்கிறோம்
ReplyDeleteநம்பிக்கையாளர்களாக இருந்த முஸ்லிம்கள் இன்று நம்பிக்கையற்றவர்கள் வரிசையில் முதலிடத்தை தொட்ட வண்ணம் உள்ளனர்.
ReplyDeleteதனது எஜமான் 550 000 கொடுத்துதவிய பின்பும் எவ்வாறு அவர்களால் செய்யமுடியந்தது?
இது எல்லாருக்கும் குறிப்பாக பெற்றோர்களுக்கும் ஒரு பாடம். பிள்ளைகளை வளர்ககம்போது Rizk ( பரகத்) அல்லாஹ்விடமிருந்து தான் வருகின்றது என்பதையும் , கஷ்டம் நேர்ந்தால் அல்லாஹ்விடமே உதவி கேட்க வேண்டும் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.
கொலைக்கு கொலை எனும் இஸ்லாமிய சட்டத்தை கொடுத்தால் 10 நபரின் தலை வெட்டப்படும்.1000 நபர்கள் பாதுகாக்கப்பக்கப்படுவார்கள்.ஏன் எமது சமூகம் இவ்வாறு பணத்திற்கு அடிஅடிமைப்பட்டுள்ளது.....
ReplyDeleteஅவசரப்பட்டு இலங்கை ெ ெபாலிசாரின் கதையை நம்பிவிடாதீர்கள்...சிரயா என்ற சிறுமி கற்பழித்து ெ காலைசெய்யப்பட்ட வழக்கில் அப்பாவி மாணவன் ஒருவன் மீது குற்றச்சாட்டு ோடப்பட்டு பின்னர் தவறு என்று அந்த ெ பாலிசாரே ஒத்துக்கண்ட விடயமும் உள்ளது...
ReplyDeleteYes brother... we must bring up our children as pious and righteous offspring to Allah since they are toddling.
ReplyDeleteThey should get capital punishment! முஸ்லிம்களுக்கு திருமண சட்டம் இருக்கும்போது குற்றம் செய்தால் அதற்கும் சரியா சட்டத்தை நிலைநாட்ட சொல்லவேண்டும்.
ReplyDelete( இப்படி ஒரு சட்டத்தை அமுல் படுத்தினால் முதலில் ACJU தான் எதிர்பபார்கள் போலும். ஏனென்றால் கைகள் வெட்டப்பட்ட வாழ்ககையை அவர்களுக்கு நினைத்துப்பார்ககவும் முடியாது)
These dog's families too must be keep away from Muslim Community no one should participate in their function. They must treat like how in India Brahman treat Dalith.
ReplyDeleteThat's unislamic அவர் செய்த குற்றத்துக்காக குடும்பத்தை பலிவாங்குவதா?
Delete